40 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ERBE செயற்கைக்கோள் பெரிங் கடல் மீது வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததை பாதுகாப்புத் துறை உறுதி செய்தது. 






1984ஆம் ஆண்டு புவி கதிர்வீச்சு தொடர்பான ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்பிய ஈஆர்பிஈ (ERBE) செயற்கைகோள் மீண்டும் பூமிக்குத் திரும்பியது. இந்தச் செயற்கைக்கோள் தனது 40 ஆண்டு விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது.


5,400 பவுண்டுகள் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பெரிங் கடல் மீது வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததை பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது. வளிமண்டலத்தில் பயணிக்கும்போது பெரும்பாலான செயற்கைக்கோள் பகுதிகள் எரிந்துவிடும் என்று நாசா எதிர்பார்த்தது.  அக்டோபர் 5, 1984 இல் ஸ்பேஸ் ஷட்டில் சேலஞ்சரில் இருந்து ஏவப்பட்டது, ERBS விண்கலம் நாசாவின் மூன்று செயற்கைக்கோள் கொண்ட புவி கதிர்வீச்சு பட்ஜெட் பரிசோதனை (ERBE) திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.


இது மூன்று கருவிகளைக் கொண்டு சென்றது, இரண்டு கருவிகள் பூமியின் கதிர்வீச்சு ஆற்றலை அளவிடுவதற்கும், மேலும் ஒரு கருவி  ஓசோன் உட்பட அடுக்கு மண்டலக் கூறுகளை அளவிடுவதற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.  பூமியின் கதிர்வீச்சு ஆற்றலை அளவிடும் கருவிகள் பூமியின் வானிலை மாற்றங்களை பற்றி பதிவு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டது. ஓசோன் உட்பட அடுக்கு மண்டலக் கூறுகளை அளவிடும் கருவி பூமியில் இருக்கும் உயிரினங்களை புற ஊதாக் கதிர்களிலிருந்து எப்படி பாதுக்காப்பது பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டது.  


இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் 2005ஆம் ஆண்டு வரை நீட்டித்து உழைத்துள்ளது. பின்னர் அதனை நாசா விஞ்ஞானிகள் பூமிக்குத் திரும்ப வரவழைக்க நடவடிக்கை எடுத்தனர்.


பூமியின் கதிர்வீச்சு சமநிலையில் மனித நடவடிக்கைகளின் விளைவைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இந்தச் செயற்கைகோள் அளித்துள்ள தரவுகள் பயன்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோள் இந்திய நேரப்படி திங்கட்கிழமை காலை 5:10 மணிக்கு பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது.