அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரில், லியா ரோஸ் ஃபீகா, தான் வென்ற 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் லாட்டரி டிக்கெட்டை கவனக்குறைவாக தூக்கிப் போட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. லியா ரோஸ் தான் வாங்கிய லாட்டரியில் பாதி மட்டுமே சுரண்டிய நிலையில், கவனக்குறைவாக அதை லாட்டரி டிக்கெட் கடையிலேயே தூக்கி போட்டிருக்கிறார். அந்த கடையை இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் நடத்தி வந்துள்ளனர். பத்து நாட்களுக்கு முன்னர், கடையை சுத்தம் செய்த போது லாட்டரி டிக்கெட்டை கண்டெடுத்துள்ளனர். லாட்டரி டிக்கெட்டில் மீதுமுள்ளவற்றை சுரண்டிய போதுதான், அது 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஜாக்பாட் லாட்டரி  டிக்கெட் என்பது கடைகாரர்களுக்கு தெரியவந்துள்ளது. 


ஜாக்கெட் பரிசு மீது ஆசைப்படமால், லியா ரோஸை அழைத்து விசயத்தை எடுத்துரைத்துள்ளனர். முதலில் ஜாக்பாட் பரிசை நம்ப மறுத்த லியாவும், பிறகு கண்ணீருடன் பரிசுத்தொகையை ஏற்றுக் கொண்டார். இந்திய மதிப்பில் 7.2 கோடி ரூபாய் பரிசு வென்றிருக்கும் அவர், கடந்த ஜனவரி மாதம் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, மரணத்தின் விளிம்புநிலை வரை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கவுண்டமணி - செந்தில் லாட்டரி காமெடி:              


15 லட்சத்துக்காட செலவில்லை? .... இந்த ஊரு என்ன விலைன்னு   கேளு? .... சரி- இந்த தெருவாது என்ன விலைன்னு கேளு... ஐயோ.... நான் இப்ப எதையாச்சும் வாங்கியாகனுமே டா...... வாங்கி போட்டா பின்னாடி உதவும்டா? இந்த திரைப்பட வசனத்தை எங்கையோ  கேட்டது போன்று உள்ளதா? 


1993-ஆம் ஆண்டு ராக்கி கோவில் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற கவுண்டமணி - செந்தில் லாட்டரி டிக்கெட் காமெடி தான் இது. கிராமங்களில்  சாதி கட்டமைப்புகளில் இருந்து வெளியேறத் துடிக்கும் ஒரு சாதாரண மனிதனின் அவஸ்தையை இந்த காமெடி படம் போட்டுக் காட்டியிருக்கும். 




சவரத் தொழில் செய்யும் கவுண்டமணி, அவ்வூரில் அதிகராம் பெற்ற சமூகத்தை சேர்த்த விஜயகமாரிடம் ரூ. 5000 கடன் தொகையாக கேட்பார். உனக்கெதுக்கு இவ்வளவு பெரிய தொகை? என்று விஜய்குமார் பதிலளிப்பார். அந்த தருணத்தில், தனக்கு லாட்டரி டிக்கெட்டில் 15 லட்சம் பரிசுத் தொகை விழுந்த தகவல் கவுண்டமணிக்கு தெரியவரும்.  உடனடியாக, கவுண்டமணியின் அடிப்படி சொல்லாடல் மாறிவிடும். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் பார்க்க முடியாது? நீயும், நானும் சமம்! ஏன், என்னிடம் பணம்  உள்ளது நான் உன்னைவிட ஒரு படி மேல் என்று கவுண்டமணி தெரிவிப்பார். 


ஆனால், லாட்டரி சீட் தொலைந்து போக கவுண்டமணியின் அடிப்படைக் கனவுகள் சிதைந்துபோகும். மேலும், சவரப் போட்டியை மதிக்காத காரணத்தினால் கவுண்டமணி தனது புது வாழ்கையை இழந்துவிட்டதாக தத்துவம் பேசப்படும். 



உண்மையில், 90-களில் வெளிவந்த பல திரைப்படங்கள் சாதி கட்டமைப்பை கேள்விக் கேட்டிருந்தாலும், சாதிக்கான ஒரு முழுமையான பதிலை தரவில்லை. உதாரணமாக, மற்றொரு திரைப்படத்தில் அடுப்பில் தன் வாழ்கையை இழந்த கவுண்டமணி மாதம் 10,000 சம்பாதிக்க விரும்புவார். ஆனால், "கப்பல்ல வேலை.. : என்ன வேலை.. : நடுவில நின்னா இறங்கி தள்ளனும்" என்ற காமெடியோடு அவரின் கனவுகள் தகர்க்கப்பட்டிருக்கும்.




பருத்தி வீரன் படத்தில் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்துக்கு  முன்னேறத் துடிக்கும் "டக்லஸ்" கதாபாத்திரம், ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கும்போது திரையரங்கில் மகிழ்ச்சி தாண்டமாடும். மேற்கத்திய நாடுகள் போல் அல்லாமல், சாதிகட்டமைப்புகள் வலுப்பெற்ற சமூகத்தில், எதிர்பாராத வெற்றி, பொருளாதாரா முன்னேற்றம், அதிர்ஷ்டம் எல்லாம் நகைச்சுவையாகவே உள்ளது.