ஐக்கிய நாடுகள் சபையானது அதிகாரபூர்வமாக 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஐ.நா. சபையானது எதிர்காலத் தலைமுறையினரைக் காப்பாற்றுவது, மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து நபர்களுக்கும் சம உரிமை உருவாக்குதல் மிக முக்கியமாக இன்னொரு மாபெரும் போரை ஏற்படுத்தாதிருத்தல் மட்டுமல்லாது ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பு நாடுகளினதும் மக்களுக்கு நீதி, சுதந்திரம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பரந்த நோக்கத்தையும் கொண்டிருந்தது. 1952 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை அலுவலகமாகச் செயற்பட்டு வருகின்ற நியூயார்க் தலைமையகத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தேறியது.






நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை கட்டிடம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று திடீரென துப்பாக்கியுடன் வந்துள்ளார். துப்பாக்கியுடன் வந்த அவர் பாதுகாப்பு அறை அருகே நின்றுகொண்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். அந்த நபர் விடுத்த மிரட்டலை அடுத்து ஐ.நா. சபை திடீரென பரபரப்பானது. அதையடுத்து தலைமை அலுவலகத்தின் வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டன. உள்ளே இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச முயன்றனர். ஆனால் விடாப்பிடியாக போலீசாரை மிரட்டிய அவரை அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.






நேற்று முழுவதும் இந்த சம்பவம் காரணமாக ஐ.நா. சபை தலைமையகம் மூடப்பட்டது.அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. இச்சம்பவத்தால் ஐ.நா. சபை அலுவலகம் முன்பு 3 மணி நேரம் பரப்பரப்பும், பதட்டமும் நிலவியது. தற்போது அந்த நபர் போலீஸ் கஸ்டடியில் இருப்பதாகவும், பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலுக்கு இல்லை என்று காவல் துறையினர் கூறி உள்ளனர். "அவர் ஐ.நா. சபை தலைமையகத்தின் பணியாளா, முன்னாள் பணியாளா, அல்லது எந்த வகையிலாவது அதற்கு சம்மந்தப்பட்டவரா என்ற எதுவும் இதுவரை தெரியவில்லை" என்று ஒரு காவல் துறை அதிகாரி கூறினார். காலையில் போடப்பட்ட முழு அடைப்பு, மாலையில் ஒரே ஒரு சிறு வழி மட்டும் ஏற்படுத்தப்பட்டு அலுவலர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.