நெவர் மைண்ட் ஆல்பத்திற்கு எதிரான குழந்தை ஆபாச வழக்கை அமெரிக்க மாவட்ட நீதிபதி தள்ளுபடி உத்தரவிட்டார்.
குழந்தை நிர்வாண புகைப்பட வழக்கு:
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உள்ள நீதிமன்றத்தில் குழந்தை நிர்வாண புகைப்படங்களை பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. 1991 ஆம் ஆண்டு 4 மாத குழந்தை, நீச்சல் குளத்தில் ஆடையின்றி இருக்கும் புகைப்படம் நெவர் மைண்ட் ஆல்பத்தின் புகைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆல்பம் வணிக ரீதியாக பெரும் லாபம் அடைந்ததாக கூறப்பட்டது.
இந்த 4 வயது குழந்தையான 30 வயதாகும் எல்டன் என்பவர், தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது மன ரீதியாக பாதிப்படையச் செய்வதாகவும், அதற்கு இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நீச்சல் மையத்தில் புகைப்படக் கலைஞரான கிர்க் வெடில் 1991 இல் எடுத்த ஒரு படத்தை இசைக்குழு பயன்படுத்தியதில் இருந்து இந்த வழக்கு ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் ஒரு மீன் கொக்கியில் துளைக்கப்பட்ட ஒரு டாலரை நோக்கி நிர்வாணமாக நீந்துவதை காட்டுகிறது.
”காலம் தாண்டிவிட்டது”
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், இசைக்குழு தன்னை பாலியல் ரீதியாக சுரண்டியதாக குற்றம் சாட்டும் எல்டன் நீண்ட காலம் கழித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வானா மீது வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த புகைப்படம், தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாக எல்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கு 10 ஆண்டு கால வரம்புகளுக்கு அப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். இதனால், இவ்வழக்கில் எல்டனுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.