இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு அருகே உள்ள சவுத்வார்க் பகுதியிலுள்ளா ஆர்ச் ரயில்வே பாலத்தில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியே பெரும் புகை மண்டலமாக மாறியிருந்தது. இந்த புகை மூட்டத்தை கட்டுப்படுத்தி தீயை அணைக்க தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்துள்ளனர்.


இந்நிலையில் இந்த தீ விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த வீடியோவில் புகை மூட்டத்தின் இருக்கும் சாலைகள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்த முயலும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 


 






இந்த வீடியோவை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 70 தீயணைப்பு வீரர்கள் பாடுபட்டனர். எனினும் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் எற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 


 






இதற்கிடையே இந்த தீ விபத்து லண்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்டதாக தவறாக பதிவிட்டு வந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக லண்டன் தீயணைப்பு துறை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவை ஒன்றை செய்திருந்தது. அதில் தெளிவாக தீ விபத்து லண்டன் ரயில் நிலையத்தில் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண