Iran President: ஈரான் பிரதமர் இப்ராஹிம் ரைசிக்கு முன்னதாகவே, பல சர்வதேச தலைவர்களும் ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.


ஈரான் பிரதமர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு:


ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர்,  கடும் மூடுபனியில் மலைப்பகுதியைக் கடக்கும்போது மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது. 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிபர் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, முக்கிய தலைவர்கள் விமான விபத்துகளில் உயிரிழப்பது என்பது புதியதல்ல. ஏற்கனவே பல சர்வதேச தலைவர்கள் கூட விபத்தில் உயிரிழந்த விபத்துகள் அரங்கேறியுள்ளன.


விபத்தில் பலியான சர்வதேச தலைவர்கள்: 



  • பராகுவேவின் அதிபராக இருந்த ஜோஸ் ஃபெலிக்ஸ் எஸ்டீகேரிபியா, 1940ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி அட்லாஸ் பகுதியில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

  • பிலிப்பைன்ஸின் அதிபராக இருந்த ரமோன் மகசேசே, 1957ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி செபு பகுதியில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

  • பிரேசில் அதிபராக இருந்த நேரு ரமோஸ், 1958ம் ஆண்டு ஜுன் 16ம் தேதி நடைபெற்ற விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

  • ஈராக் அதிபராக இருந்த அப்துல் சலாம் அரிஃப், 1966ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பாக்தாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

  • பிரேசில் அதிபராக இருந்த ஹம்பெர்டோ டெ அலென்சர்  கேஸ்டிலோ பிரான்கோ, 1967ம் ஆண்டு ஜுலை 17ம் தேதி ஃபோர்டலெஜா பகுதியில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

  • பொலிவியா அதிபராக இருந்த ரெனே பேரின்டோஸ், 1969ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி ஆர்க் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர்  விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

  • யூகோஸ்லோவியாவின் பிரதமராக இருந்த டிஜெமல் பிஜெடிக், 1977ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

  • போர்ச்சுகல் பிரதமராக இருந்த பிரான்சிஸ்கோ டி சா கார்னிரோ, 1980ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி  நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்

  • பாகிஸ்தான் அதிபராக இருந்த முகம்மது ஜியா-உல்-ஹக், 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி பஹவல்பூரில் நடந்த விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

  • லெபனான் பிரதமராக இருந்த ரஷீத் கராமி, 1987ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்

  • ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இருந்த, டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் 1961ம் ஆண்டு எண்டோலா பகுதியில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


இதேபோன்று மடகாஸ்கர், போலந்து, சிலி போன்ற பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், விமான விபத்தில் உயிரிழந்த சம்பவமும் வரலாற்றில் அரங்கேறியுள்ளன. இதில் சில எதிர்பாராத விபத்துகளாகவும், சில திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்ற குற்றச்சாட்டுகளும் இன்றளவும் நிலவுகின்றன.