உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும், 2026-ம் ஆண்டை வரவேற்க முழுமையான உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், உலகிலேயே முதல் நாடாக, கிரிபாட்டி தீவும், அடுத்ததாக நியூசிலாந்தும் ஏற்கனவே புத்தாண்டை வரவேற்றுவிட்டனர். இன்னும் எந்தெந்த நாடுகள் நமக்கு முன்னதாகவே புத்தாண்டை வரவேற்கின்றன.? பார்க்கலாம்.
முதல் நாடாக புத்தாண்டை வரவேற்ற கிரிபாட்டி தீவு
உலகம் முழுவதிலும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், புவியின் சுழற்சி காரணமாக, உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் காலநிலை, நேர முறைகள் என்பது, அந்த நாட்டின் இருப்படத்தை பொறுத்து மாறுபடுகிறது.
அந்த வரிசையில், உலகிலேயே முதல் நாடாக, 2026 புத்தாண்டை, பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி வரவேற்றுள்ளது. ஆம், இந்திய நேரப்படி, மாலை 3.38 மணிக்கே, அங்கு 2026-ம் ஆண்டு பிறந்துவிட்டது. பூமியின் கிழக்கு கோடியில் உள்ள இந்த கிரிபாட்டி தீவின் கிரிட்டிமதி நகரம், 2026-ம் ஆண்டிற்குள் ஏற்கனவே அடியெடுத்து வைத்துவிட்டது.
இதையடுத்து, கிரிபாட்டி நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு
கிரிபாட்டி தீவுகளுக்கு அடுத்தபடியாக, நியூசிலாந்தில் 2026 புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டில் உள்ள ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், மக்கள் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.
பல்வேறு நாடுகளிலும் பிறந்த புத்தாண்டு
இதைத் தொடர்ந்து, சமோவா, டோங்கா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு 2026 பிறந்துள்ளது. அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள், வாண வேடிக்கைகளுடன், கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவிற்கு முன்பே புத்தாண்டை கொண்டாடும் மற்ற நாடுகள் எவை.?
- ஆஸ்திரேலியா - இந்திய நேரப்படி மாலை 6.30 மணி(டிச.31).
- ஜப்பான் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி(டிச.31).
- தென் கொரியா - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி(டிச.31).
- வட கொரியா - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி(டிச.31).
- சீனா - இந்திய நேரப்படி இரவு 9.30 மணி(டிச.31).
- ஹாங்காங் - இந்திய நேரப்படி இரவு 9.30 மணி(டிச.31).
- தாய்வான் - இந்திய நேரப்படி இரவு 9.30 மணி(டிச.31).
- தாய்லாந்து - இந்திய நேரப்படி இரவு 10.30 மணி(டிச.31).
இதைத் தொடர்ந்து, இரவு சரியாக 12 மணிக்கு நம்முடன் சேர்ந்து, இலங்கையும் புத்தாண்டை வரவேற்கும். இந்நிலையில், நமக்குப் பிறகு புத்தாண்டை வரவேற்கும் நாடுகள் எவை என்பதை பார்ப்போம்.
- ரஷ்யா - இந்திய நேரப்படி நாளை காலை 2.30 மணி(ஜன.1).
- உக்ரைன் - இந்திய நேரப்படி நாளை காலை 3.30 மணி(ஜன.1).
- ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, சுவிட்சர்லாந்து - இந்திய நேரப்படி நாளை காலை 4.30 மணி(ஜன.1).
- இங்கிலாந்து, போர்ச்சுகல், கானா - இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணி(ஜன.1).
- பிரேசில், அர்ஜென்டினா - இந்திய நேரப்படி நாளை காலை 8.30 மணி(ஜன.1).
- அமெரிக்கா (ஈஸ்ட் கோஸ்ட்) - இந்திய நேரப்படி நாளை காலை 10.30 மணி(ஜன.1).
