விண்வெளியின் முக்கியக் கோள்களில் ஒன்றான வியாழன் பூமிக்கு மிக அருகில் வந்துள்ளது. இது மிகவும் அரிதான நிகழ்வாகும். இது கடைசியாக 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. பொதுவாக வியாழன் பூமிக்கு 600 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும். ஆனால் தற்போது அது 367 மில்லியன் மைல்கள் அருகில் வந்துள்ளது. இந்த அரிய நிகழ்வு இனி 107 ஆண்டுக்ளுக்குப் பிறகு 2129ல் மட்டுமே நிகழும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.






வியாழன் கோள் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 11 வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. இந்த சுழற்சியின் போது, ​​அது பூமியிலிருந்து பார்க்கக்கூடிய வகையில் சூரியனின் எதிர்ப்பக்கத்தில் ஒரு புள்ளியை அடைகிறது. சுவாரஸ்யமாக, தற்போது, வியாழன் அதன் சுற்றுப்பாதையில் ஒரு தனித்துவமான அமைப்பில் இருக்கும், இது 59 ஆண்டுகளில் நிகழ்ந்திராத ஒரு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. 


சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளான வியாழன் வானத்தில் -2.9 விரிவு அளவுடன் தோன்றும்.அதனால் அது இன்னும் பிரகாசமாகவும் பெரியதாகவும் இருக்கும். மேலும் இது நேற்று முன் தினம் மாலை 5:29 மணி முதல் நேற்று அதிகாலை 5:31 மணி வரை வானத்தில் இரவு முழுவதும் வானத்தில் இருக்கும் என ஊடகங்களில் கூறப்பட்டாலும் வரும் வெள்ளி வரை இது வானத்தில் தென்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


நாசாவின் ஆராய்ச்சி வானியற்பியல் நிபுணர் ஆடம் கோப்லெஸ்கி கூறுகையில், வியாழனைப் பார்க்க இருட்டாகவும், வறண்டதாகவும், உயரமாகவும் இருக்கும் இடம்தான் சிறந்தது என்று பரிந்துரைக்கிறார். "நல்ல தொலைநோக்கியுடன் பார்த்தால் அதன் மத்தியில் இருக்கும் பேண்டிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மூன்று அல்லது நான்கு கலிலியன் செயற்கைக்கோள்கள்  தெரியும்." என்று அவர் கூறுகிறார். வியாழனின் பெரிய சிவப்பு புள்ளியை அதன் கூடுதல் விவரங்களுடன் கண்காணிக்க, கோபெல்ஸ்கி 4 அங்குலம் அல்லது அதற்கும் பெரிய தொலைநோக்கியை பரிந்துரைத்தார்.


 






மிக அண்மையில்தான் ஜூடி ஸ்கிமிட் வடிவமைத்த நாசாவின் வெப் தொலைநோக்கி வியாழனின் மிகத் தெளிவான படங்களை எடுத்து அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.