ஈரானின் தாக்குதலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக தகவல்கள் தீயாய் பரவின. இதையடுத்து, அவர் மக்களுக்கு உரையாற்றுவது போல் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. ஆனால், பல்வேறு ஆதாரங்களை சுட்டிக்காட்டி, அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறிவந்தனர். இந்நிலையில், நேற்று புதிய வீடியோ ஒன்று வெளியானது. ஆனால், அந்த வீடியோவும் போலி என, அதிலும் பல்வேறு தவறுகளை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவை என்ன என்பதை பார்க்கலாம்.

ஏற்கனவே வெளியான வீடியோ - போலி என சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள்

முன்னதாக, நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில், கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அவர் 6 விரல்களைக் கொண்டிருப்பது போல் தோன்றியதைத் தொடர்ந்து, அந்தக் காட்சிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இதோடு, பல்வேறு காரணங்களையும் இணையதளவாசிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

 

வெளியான புதிய வீடியோ

இதைத் தொடர்ந்து, நெதன்யாகு பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி, அவரது எக்ஸ் தள கண்கில் நேற்று புதிதாக  ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் அவர், தனது விரல்களையும் காட்டி பேசுவதும் இடம்பெற்றிருந்தது. தற்போது பகிரப்பட்ட வீடியோ, ஆன்லைனில் பரவும் தவறான தகவல்களுக்கு பதிலளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.

புதிய வீடியோவும் போலி என பரவும் செய்திகள்

இந்த புதிய வீடியோ நேற்று வெளியான நிலையில், இந்த வீடியோவும் போலி தான் என அடித்துக் கூறுகின்றனர் இணையதளவாசிகள். இந்த வீடியோவில், அவர் கையில் வைத்திருக்கும் கிளாசில் வழிய வழிய காபி இருக்கும் நிலையில், அவர் கையை எவ்வளவு ஆட்டினாலும் அது சிந்நவில்லை என்றும், அவர் குடித்த பிறகும் காபியின் அளவு குறையவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும், அவர் கையை பாக்கெட்டிற்குள் நுழைக்கும்போது, துணி தானாகவே நகர்ந்து கையை மூடுவதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகிறன்றர். அதோடு, மற்றொரு பெரிய விஷயமாக, அவருக்கு அருகே இருக்கும் கம்ப்யூட்டரில் காட்டப்படும் தேதி 2024 என குறிப்பதையும் ஜூம் செய்து காட்டியுள்ளனர்.

இதனால், இந்த வீடியோவும் போலி தான் என்று தெளிவாகிறது என நெட்டிசன்கள் கூறும் நிலையில், நெதன்யாகுவிற்கு என்ன ஆனது என்ற கேள்வி உண்மையிலேயே எழுகிறது. இதற்கு இஸ்ரேல் என்ன பதில் கூறப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.