USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
USA Isarael IRAN War: இஸ்ரேல் - லெபனான இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

USA Isarael IRAN War: இஸ்ரேல் - லெபனான இடையேயான போர் நிறுத்தம் சூழலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தன்மையான நடந்துகொள்வார்கள் என நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம்
அமெரிக்கா - ஈரான் இடையேயான இடைக்கால போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஆன பிறகும் கூட, ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைப்பதாக கூறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 10 நாட்களுக்கு இடைக்கால போர் நிறுத்தம் மேற்கொள்ள இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது. அமெரிக்கா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் இடம்பெற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடங்கியது. இதையடுத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் மார்ச் 2ம் தேதி இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகணைகளை தொடுத்ததால், லெபனான் மீதான தாக்குதலுக்கு நேதன்யாகு உத்தரவிட்டார். இதனால் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வேறு இடங்களில் தஞ்சமடைய கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இனி கொலைகள் இருக்காது.. - ட்ரம்ப்
இஸ்ரேல் - லெபனான் இடையேயான 10 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள சூழலில், இந்த காலகட்டத்தில் ஆயுதக்குழுவினரான ஹிஸ்புல்லா தரப்பு நல்லபடியாக நடந்துகொள்ளும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், “இந்த முக்கியமான காலகட்டத்தில் ஹிஸ்புல்லா நல்லபடியாக நடந்துகொள்ளும் என நம்புகிறேன். அப்படி நடந்துகொண்டால் அவர்களுக்கு மிகப்பெரிய நல்ல தருணமாக இது இருக்கும். இனி கொலைகள் கிடையாது. கட்டாயம் இறுதியில் அமைதி அவசியம்.” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
யுரேனியத்தை கொடுக்க ஈரான் சம்மதம்?
இதனிடையே, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எங்களிடம் வழங்க ஈரான் ஒப்புக்கொண்டதாகவும், இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், “பேச்சுவார்த்தை நல்லபடியாக சென்றுகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால் எண்ணெய் விலை, ஹார்மஸ் வழி பயணம் என எல்லாமே எளிதாகிவிடும். ஒருவேளை பேச்சுவார்த்தை சாதகமாக அமையாவிட்டால், ஏப்ரல் 22க்குப் பிறகு இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாது. மீண்டும் தாக்குதல்கள் தொடங்கும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம், யுரேனியத்தை ஒப்படைப்பது தொடர்பாக ஈரான் தரப்பில் இருந்து எந்த தகவலும் பகிரப்படவில்லை. ஒருவேளை பாகிஸ்தானில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் உறுதியானால், அதில் கையெழுத்திட ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம் செய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற்ற 21 மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எந்தவித சுமூக பேச்சுவார்த்தையும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























