இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. விமானப்படை தாக்குதல் நடத்தியதில் நெதன்யாகுவின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை என்று தெரிவித்த ஈரான் ராணுவம், விமானப் படை தளபதி அலுவலகமும் தாக்குதலுக்கு உள்ளனதாக தெரிவித்துள்ளது.

ஆனால், ஈரானின் தாக்குதலை இஸ்ரேல் மறுத்துள்ளது. எந்த ஏவுகணைகளும் இஸ்ரேலை அடைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நெதன்யாகுவின் அலுவலகம் மீது தாக்கப்பட்டதாக ஈரானின் கூற்றுகளை மறுத்த இஸ்ரேலிய செய்திகள், அவற்றை ‘தவறான பிரச்சாரம்’ என்று அழைத்தன.

துபாய், தோஹா, அபுதாபி மீது ஈரான் ராணுவம் டிரோன் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. சைப்ரஸில் உள்ள இங்கிலாந்தின் படைத்தளம் மீதும், ஐக்கிய அரபு அமீரகம் மீது 541 டிரோன்கள் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வருகிறது.

உளவுத்துறை தலைவர் உயிரிழப்பு

இஸ்ரேலின் உளவுப்படை தாக்குதலில் ஈரானின் உளவுப் பிரிவு தலைவர் ஜலால் பெளர் உசேன் கொலை செய்யப்பட்டார். ஈரான் புலனாய்வுத் துறை துணை அமைச்சர் சையத் யக்யா ஹமிடியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரானில் 555 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதல்களில் சிக்கி ஈரான் முழுவதும் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.