மேலும் அறிய

Iran Youth Video to Trump: “ட்ரம்ப் சார், பேச்சுவார்த்தையே வேணாம், அட்டாக் பண்ணுங்க“; வீடியோ போட்டு உயிரை விட்ட ஈரான் இளைஞர்

ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவரும் நிலையில், அதெல்லாம் வேண்டாம், உடனே தாக்குங்கள் என்று வீடியோ வெளியிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் ஒரு ஈரானிய இளைஞர்.

ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை எச்சரிக்கை விடுத்த போதிலும், ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தான் வருகின்றன. எனினும், வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதால், பதற்றமான சூழலே அங்கு நிலவுகிறது. இந்நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம், உடனே தாக்குதல் நடத்துங்கள் என்று ட்ரம்ப்பிற்கு கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள ஈரானிய இளைஞர் ஒருவர், அதன்பிறகு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் அவர் என்ன பேசியுள்ளார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ட்ரம்ப்பிற்கு வீடியோ போட்டுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட ஈரானிய இளைஞர் 

பவுரியா ஹமிடி என்ற 28 வயது ஈரானிய இளைஞர் ஒருவர், ட்ரம்ப்பிற்கு வோண்டுகோள் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பின் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஈரானின் தெற்கு துறைமுக நகரமான புஷேரில் வசிக்கும் அந்த இளைஞர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், "நீங்கள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நான் இப்போது இல்லை" என்று கூறி தனது உரையை தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து, "ரஷ்யா-உக்ரைன் போரை விடவும், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரை விடவும், 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர், கொல்லப்பட்டனர், படுகொலை செய்யப்பட்டனர்," என்று, பிப்ரவரி 5-ம் தேதி தனது ' PoorY X ' யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் கூறியுள்ளார். தனது வீடியோவை "இது எனது தியாகம் - தயவுசெய்து, எனது நாட்டை விடுவிக்கவும்" என்று தலைப்பிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த காணொளியில், அமெரிக்க தலைமைக்கு அவர் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார். டெஹ்ரானுடனான எந்தவொரு ராஜதந்திர ஒப்பந்தத்தையும் தொடர வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியுடனான எந்தவொரு ஒப்பந்தமும் "உயிரிழந்த அனைவருக்கும் துரோகம் செய்வது போன்றது" என்று அவர் கூறியுள்ளார். "அதனால், தயவுசெய்து, இந்த ஒப்பந்தத்தை நிறுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் என்று நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், "தொடர்ந்து போராடுங்கள்" என்று ஈரானியர்களிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும், நாங்கள் அவரை நம்பினோம் என்றும் கூறியுள்ள அவர், ஆனால், ஆயுதம் ஏந்திய மனிதர்களுடன் சண்டையிடுவது சாத்தியமில்லை என்றும், வெளிப்புற ஆதரவு இல்லாமல் ஈரானியர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக வெல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

"ஈரானை அமெரிக்கா தாக்குவதுதான் இப்போது நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை" என்று ஹமிடி கூறியுள்ளார். "இந்த ஆட்சியை நாம் தனியாக எதிர்த்துப் போராட முடியாது. நமது மக்களுக்கு வெளிநாட்டு தலையீடு தேவை." ஈரானின் நாடுகடத்தப்பட்ட இளவரசர் ரெசா பஹ்லவிக்கு ஆதரவையும் தெரிவித்த அவர், "ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சிறந்த தேர்வு" என்று தெரிவித்துள்ளார். ஈரானுக்கு வெளியே உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் "ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த காணொளியை உருவாக்கியதன் நோக்கம், தனது வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக ஹமிடி விவரித்துள்ளார். மேலும், ஈரானியர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த பதிவு முடிந்ததும், அவர் பாரசீக மொழிக்கு மாறி, "நாங்கள் ஈரான் மக்கள் தனிமையானவர்கள், எங்களுக்கு யாரும் இல்லை, எனவே தயவுசெய்து ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும். ஈரான் வாழ்க" என்று கூறியதாக ஈரான் சர்வதேச அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ பதிவிற்குப் பிறகு, ஹமிடி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஈரானை தாக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்போது ட்ரம்ப் என்ன செய்வார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Indigo: இண்டிகோ விமானம் நடுவானில் யு-டர்ன்! பயணிகள் அதிர்ச்சி நடந்தது என்ன?
Indigo: இண்டிகோ விமானம் நடுவானில் யு-டர்ன்! பயணிகள் அதிர்ச்சி நடந்தது என்ன?
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
Top 10 News Headlines: பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு, ஈரான் உச்ச தலைவரான மொஜ்தபா - 11 மணி செய்திகள்
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Embed widget