ஈரானை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகள் தாக்கி வருகின்றன. அதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், அரபு நாடுகள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதோடு, சர்வதேச எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியையும் முடக்கி வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டிய போதிலும், அதிலிருந்து ஈரான் பின்வாங்கவில்லை. இந்நிலையில், அந்நாட்டின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ள மொஜ்தபா கமேனி, ஹார்முஸ் ஜலசந்தி மூடி தான் இருக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை குறித்து பார்க்கலாம்.

மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கை

ட்ரம்ப்பின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஈரான் உச்ச தலைவராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனி, முதல் முறையாக பேசியுள்ளார். ஆனால், நேரடியாக தோன்றாமல், அவரது அறிக்கை, ஈரான் அரசு தொலைக்காட்சியில் தொகுப்பளர் மூலம் வாசிக்கப்பட்டுள்ளது.

அதில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்து முடக்கப்பட்டுதான் இருக்கும் என்றும், அது அமெரிக்காவிற்கு எதிரான ஒரு உந்து சந்தியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மொஜ்தபா கூறியுள்ளார். மேலும், அண்டை நாடுகளான வளைகுடா அரபு நாடுகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபரின் அழைப்பு

இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், மக்களுக்கு அழைப்பு விடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், உச்சத் தலைவரின் செய்தியின் அடிப்படையில், நாட்டின் அன்பான மக்களை முந்தைய நாட்களை விட அதிக உற்சாகத்துடன் களத்தில் இறங்கி ஈரானின் எதிரிகளை விரக்தியடையச் செய்ய அழைப்பதாக கூறியுள்ளார்.

முன்னதாக, நேற்று இரவு அவர் போட்ட பதிவில், போரை முடிவுக்கு கொண்டுவர 3 நிபந்தனைகளை முன்வைத்திருந்தார். அதன்படி, ஈரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பது, இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்காலத்தில் ஆக்கிமிப்பு இருக்காது என்பதற்கான சர்வதேச உத்தரவாதத்தையும் அவர் கோரியுள்ளார். போர் முடிவுக்கு வர வேண்டும் என்றால், இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வேறு முக்கப்பட்டுதான் இருக்கும் என்று ஈரான் உச்ச தலைவரும் தற்போது தெரிவித்துள்ளார். அதனால், சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு அழுத்தம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே, போரை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலைக்கு ட்ரம்ப் வந்துள்ள நிலையில், இந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.