மேலும் அறிய

Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறிவரும் நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அவரது உடல்நிலை குறித்தும் முக்கிய தகவல் வந்துள்ளது.

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடுத்த போரின் முதல் நாளிலேயே, அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, சில நாட்களில், அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் அடுத்த உச்ச தலைவராக அறிவிக்கப்பட்டர். இந்த நிலையில், அந்த தாக்குதலில் மொஜ்தபாவும் இறந்திருக்கலாம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூறி வருகின்றன. ஆனால், மொஜ்தபா உயிருடன் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அவரது உடல்நிலை குறித்தும் முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

தாக்குதலில் கொல்லப்பட்ட  கமேனி - அமெரிக்கா இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், 3 கட்ட பேச்சுவார்த்தையும் ஓமனின் மத்தியஸ்தத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்கா அளித்த அமைதித் திட்டத்தின் பெரும்பாலான அம்சங்களை ஈரான் ஏற்றுக்கொண்டதாக ஓமன் அறிவித்தது. ஆனால், அதே நாள் இரவு, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை தொடங்கின.

இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ஈரான், உடனடியாக பதில் தாக்குதலை தொடங்கியது. அதன் தாக்குதல், அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ராணுவ தளங்களை கொடுத்து உதவிய வளைகுடா அரபு நாடுகள் மீது இறங்கியது. இதனிடையே, முதல் நாளிலோயே, ஈரான் அதிபர் அலுவலகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அடுத்த தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும், அவரும் கொல்லப்படுவார் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தன. 

அடுத்த உச்ச தலைவராக தேர்வான மொஜ்தபா கமேனியும் பலியா.?

இந்நிலையில், ஈரானின் அடுத்த உச்ச தலைவராக, மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் 56 வயதான மோஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டு, மார்ச் மாதம் 8-ம் தேதி அறிவிக்கப்பட்டார்.

அப்போது முதல், அவரது பெயரில் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. அவை, அந்நாட்டு அரசு ஊடகங்களில் வாசிக்கப்படுகின்றன. ஆனால், அவர் பொதுவெளியில்  இதுவரை தோன்றவில்லை. இது பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியது.

சமீபத்தில், அவர் கோமா நிலையில் இருப்பதாகக் கூட செய்திகள் வெளியாகின. ஆனால், மறுபுறம், முதல் நாள் நடந்த தாக்குதலில் மொஜ்தபாவும் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறிவந்தது. மொஜ்தபாவும் பொதுவெளியிலோ, வீடியோவிலோ தோன்றாததால், அந்த சந்தேகம் வலுத்து வந்தது.

“உயிருடன் இருக்கிறார், ஆனால் பலத்த காயமடைந்துள்ளார்“

இந்நிலையில், மொஜ்தபா உயிருடன் இருப்பதாகவும், ஆனால், அவரது முகம் சிதைக்கப்பட்டு, இடையாளம் தெரியாத அளவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன. மேலும், அவர் ஒரு காலை இழந்துவிட்டதாகவும், கல்லீரல் மற்றும் வயிற்றுப் பகதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அதனால் தான் அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும், இருக்கும் இடத்தில் இருந்தே, பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவர் மனதளவில் தெளிவாகவே இருப்பதாகவும், தொலைபேசி வாயிலாக நாட்டின் முக்கிய நடவடிக்கைகளில் கலந்துகொண்டு வழிநடத்துவதாகவும் கூறப்படுகிறது.

எனினும், ஈரான் தரப்பிலிருந்து இந்த செய்திகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

US Iran War Netanyahu: “உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
“உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க வர்த்தக நீதிமன்றம்; 10% உலகளாவிய வரி செல்லாது என அதிரடி தீர்ப்பு
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க வர்த்தக நீதிமன்றம்; 10% உலகளாவிய வரி செல்லாது என அதிரடி தீர்ப்பு
Trump Warns Iran: “ஈரானை பைத்தியக்காரர்கள் வழிநடத்துகிறார்கள்“; இன்னும் ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தப்படும் - ட்ரம்ப்
“ஈரானை பைத்தியக்காரர்கள் வழிநடத்துகிறார்கள்“; இன்னும் ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தப்படும் - ட்ரம்ப்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
US Iran War Netanyahu: “உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
“உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
Most Unsafe Cars: ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
Embed widget