ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், கமேனி கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பினர், நேற்று முதல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அவர்களின் ஏவுகணைகளை வீழ்த்த, இஸ்ரேல் அதிநவீன அயர்ன் பீம் எனப்படும் இரும்பு கற்றை பாதுகாப்பு அமைப்பை களமிறக்கியுள்ளது.

Continues below advertisement

இஸ்ரேலை தாக்கும் ஹெஸ்பொல்லா

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலை தொடங்கிய நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக நேற்று காலை அறிவிப்பு வெளியானது.

இதைத் தொடர்ந்து, பழிவாங்குவோம் என சூளுரைத்து, ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்திவந்த நிலையில், அது இன்னும் தீவிரமடைந்துள்ளது. அதோடு, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமிலும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.

Continues below advertisement

இதனிடையே, ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடங்கினர். ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ‘Iron Beam‘

இந்த நிலையில், ஹெஸ்பொல்லாவின் தீவிர தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், உள்வரும் ஏவுகணைகளை தகர்க்க, அயர்ன் பீம் எனப்படும் இரும்பு கற்றை என்ற நவீன பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் நிறுவியுள்ளது.

இதன் மூலம், ஹெஸ்பொல்லாவின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருகிறது இஸ்ரேல். இந்த அயர்ன் பீமின் செயல்பாடு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது இஸ்ரேல் ராணுவத்தின் போர் கட்டுப்பாட்டு அறை. டெல் அவிவின் புதிய போர் சகாப்தம் என விவரிக்கப்படும் அயர்ன் பீமின் திறன்களை அந்த வீடியோ பதிவு செய்கிறது.

இந்த ஆயுதம் வரலாற்றில் முதன் முறையாக பயன்படுத்தப்படுவதாக அவர்களது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘Iron Beam‘ என்பது என்ன.?

அயர்ன் பீம் (Iron Beam) என்பது, இஸ்ரேலின் ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் (Rafael Advanced Defense Systems) உருவாக்கிய, உலகின் முதல் 100kW வகுப்பு உயர் ஆற்றல் கொண்ட லேசர் ஆயுத அமைப்பாகும் (HELWS). இது ஏவுகணைகள்ட்ரோன்கள் மற்றும் மோட்டார் குண்டுகளை, ஒளியின் வேகத்தில் சுட்டு வீழ்த்தி, குறைந்த செலவில் கூடுதல் சேதமின்றி வான் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

பாரம்பரிய இடைமறிப்பு ஏவுகணைகளைப் போலல்லாமல், லேசர் அடிப்படையிலான இந்த அமைப்பு, தொடர்ச்சியான ஆற்றல் மூலத்தை நம்பியுள்ளது. மின்சாரம் கிடைக்கும் வரை, இந்த அமைப்பு வெடிமருந்துகள் தீர்ந்து போகும் அபாயத்தை ஏற்படுத்தாது. அதனால், இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த தொழில்நுட்பத்தை ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பதில் ஒரு சாத்தியமான "கேம்-சேஞ்சர்" என்று விவரித்துள்ளனர்.

இரும்பு கற்றை வான் பாதுகாப்பு அமைப்பின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக, உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனங்களான RADS மற்றும் எல்பிட் சிஸ்டம்ஸ் ஆகியவற்றுடன், இஸ்ரேல் இந்த வாரம் 500 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.