Iran-Israel Conflict LIVE: இந்தியர்கள் மீது கவனம் எடுக்கிறோம்.. இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை
Iran Israel Conflict LIVE Updates: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்
தாக்குதல் நடத்துவற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே நட்பு நாடுகளிடமும் அண்டை நாடுகளிடமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துவிட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.
Iran-Israel Conflict: இஸ்ரேலுடன் நிற்கிறோம் - ஜெர்மனி
”இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு துணை நிற்கிறோம். ஜி7 கூட்டாளர்களுடன் இதுகுறித்து விவாதிக்க இருக்கிறோம்” - ஜெர்மனி
விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தாக்குதலை கைவிட்டு அமைதிக்கு திரும்புமாறு இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள ராணுவ தளம் சிறிய அளவில் சேதமடைந்துள்ளது.
Background
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நாளுக்குநாள் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று இரவு ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. இந்த தாக்குதலின்போது அமெரிக்கா சில ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இஸ்ரேலில் நேற்று இரவு திடீரென சைரன்கள் ஒலிக்க தொடங்கின. தொடர்ந்து, அடுத்தடுத்து வெடி சத்தங்கள் நிகழ்ந்துள்ளது. இதில், இதுவரை உயிர்ச்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஈரானில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈரானின் ஆணவத்துக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் தயாராக உள்ளதாகவும், பல ஆண்டுகளாக ஈரானின் நேரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என்றும் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இஸ்ரேலுடன் அமெரிக்கா நிற்பதையும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பல நாடுகளின் ஆதரவையும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். எங்களுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம். எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராக நாங்கள் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். கடவுளின் உதவியோடு நாம் ஒன்றுபட்டு நிற்போம். நம் எதிர்கள் அனைவரையும் வெல்வோம்.” என்று தெரிவித்தார்.
ஈரான் தாக்குதல் நடத்தியது ஏன்..?
கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த ஜெனரல் அதிகாரி உட்பட ஏழு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் குற்றம் சாட்டியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -