மேலும் அறிய

Iran War Kuwait Hit: குவைத் எண்ணெய் கிணறு, குடிநீர் ஆலை மீது அட்டாக்; சுத்தி சுத்தி அடிக்கும் ஈரான்; கலக்கத்தில் அரபு நாடுகள்

ஈரானின் மிக முக்கியமான உயரமான பாலம் தகர்க்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக, குவைத், பஹ்ரைன், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது.

மத்திய கிழக்கு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், நேற்று அமெரிக்க கூட்டுப்படைகளால் ஈரானின் மிக முக்கியமான பாலம் ஒன்று பயன்படுத்த முடியாத அளவிக்கு தாக்கி தகர்க்கப்பட்டது. இதனால் கோபமடைந்த ஈரான், கடும் எச்சரிக்கைகளை விடுத்த நிலையில், அரபு நாடுகள், அதாவது, குவைத், பஹ்ரைன், அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான தாக்குதல்களை நடத்தி, எண்ணெய் கிணறு, குடிநீர் ஆலை போன்றவற்றை அடித்து நொறுக்கி வருகிறது. இதனால், அரபு நாடுகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

“ஈரானை கோபப்படுததிய பாலம் மீதான தாக்குதல்“

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்த நிலையில், அந்த போர் தீவிரமடைந்து, 5-வது வாரத்தை கடந்துள்ளது. இரு தரப்பும் விட்டுக்கொடுக்காமல் அடிப்பதால், அந்த பிராந்தியமே பதற்றத்தின் உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஈரானின் கராஜ் நகரில் உள்ள பி1 என்ற முக்கியமான, மிக உயரமான பாலம் ஒன்றின் மீது, அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில், அது பயன்படுத்த முடியாத அளவிற்கு சிதைந்துள்ளது.

மேலும், அந்த வீடியோவை நேற்று வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மேலும் நிறைய வரும் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார். இதனால், ஈரான் மிகுந்த கோபம் அடைந்தது.

ஈரான் விடுத்த பதில் எச்சரிக்கை

தங்களது பாலம் தகர்க்கப்பட்ட உடனேயே கோபத்தில் ஈரான் பதிலடியை தொடங்கியது. இஸ்ரேலின் மீது முதலில் தாக்குதல் நடத்தி, ஒரு ரயில் நிலையம் மற்றும் கட்டிடத்தை சேதப்படுத்திய ஈரான், அரபு நாடுகளில் உள்ள பாலங்களை தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுத்து நேற்று 8 இடங்களின் பட்டியலையும் வெளியிட்டது.

அதேபோல், அரபு நாடுகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகள், குடிநீர் ஆலைகளையும் தாக்கியுள்ளது.

குவைத்தில் பற்றி எரியும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் ஆலை

பதில் தாக்குதலில் அரபு நாடுகளை குறி வைத்துள்ள ஈரான், குவைத்தில் உள்ள மினா அல்-அஹமதி எண்ணெய் சத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. அதில், அந்த ஆலை தீப்பற்றி எரிந்துவரும் நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், 90 சதவீத பயன்பாட்டிற்கு கடல்நீரை குடிநீராக்கும் குவைத்தில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் மீதும் ஈரான் ட்ரோன் தாக்கதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஆலையின் சில பகுதிகள் சேதமடைந்ததாக, குவைத் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதும் தாக்குதல்

இது மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியை நோக்கி ஏவப்பட்ட ஈரானின் ட்ரோனை அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. அந்த நிகழ்வின்போது, ஏவுகணையின் பாகங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையமான ஹப்ஷான் எரிவுயு நிலையத்தின் பதப்படுத்தும் தளத்தின் மீது விழுந்ததால், அங்கு தீ விபத்து ஏற்பட்டு, அந்நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹ்ரைன், சவுதி அரேபியாவிலும் தாக்குதல்

இதேபோல், பஹ்ரைனிலும் ஈரானின் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதால், அங்கு எச்சரிக்கை சைரன் ஒலித்தபடி இருந்துள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியா மீது ஏவப்பட்ட ஈரானின் ட்ரோன்களை அழித்து விட்டதாக சவுதி தெரிவித்துள்ளது.

தங்கள் பாலம் தாக்கப்பட்டதற்கு வளைகுடா நாடுகளுக்கு பலமான பதிலடி கொடுத்துவரும் ஈரானால், தற்போது அரபு நாடுகள் கலக்கத்தில் உள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
Hormuz Strait: கேட்டை ஓபன் பண்ணியாச்சு.. கீரின் சிக்னல் கொடுத்த ஈரான்! நன்றி சொன்ன டிரம்ப்
Hormuz Strait: கேட்டை ஓபன் பண்ணியாச்சு.. கீரின் சிக்னல் கொடுத்த ஈரான்! நன்றி சொன்ன டிரம்ப்
Pakistan Power Cut: போரால் வந்த வினை; தட்டுப்பாடான எரிபொருள், கட்டாகும் மின்சாரம்; பாகிஸ்தான் மக்கள் அவதி
போரால் வந்த வினை; தட்டுப்பாடான எரிபொருள், கட்டாகும் மின்சாரம்; பாகிஸ்தான் மக்கள் அவதி
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
Bengaluru Traffic: பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் - ரு.13,262 கோடியில் 11 மேம்பாலங்கள், எங்கெங்கு?
Bengaluru Traffic: பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு விடிவுகாலம் - ரு.13,262 கோடியில் 11 மேம்பாலங்கள், எங்கெங்கு?
MK Stalin : டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு... தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை . சம்பவம் செய்த ஸ்டாலின்
MK Stalin : டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு... தோல்வியில் முடிந்த தொகுதி மறுவரையறை . சம்பவம் செய்த ஸ்டாலின்
TVK Vijay: முதன் முறையாக வீடு, வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ட விஜய்! பெரம்பூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!
TVK Vijay: முதன் முறையாக வீடு, வீடாகச் சென்று ஓட்டுக் கேட்ட விஜய்! பெரம்பூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி!
Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக
Delimitation Bill Fails: தோல்வியில் முடிந்த தொகுதிமறுவரையறை- மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. ஷாக்கில் பாஜக
Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?
Women Reservation Bill 2026: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வி.. மோடி அரசுக்கு பின்னடைவு! மகளிர் இடஒதுக்கீடு மசோதா வீழ்ந்தது எப்படி?
Cameron Green: இப்போதான் வேலை செய்து 25 கோடி! ஃபார்முக்கு வந்த கிரீன் - கொல்கத்தாவை காப்பாற்றுவாரா?
Cameron Green: இப்போதான் வேலை செய்து 25 கோடி! ஃபார்முக்கு வந்த கிரீன் - கொல்கத்தாவை காப்பாற்றுவாரா?
TVK Vijay: பெரம்பூருக்கு திடீர் விசிட்! வாசலில் விசில் கோலம் வரைந்த விஜய்!
TVK Vijay: பெரம்பூருக்கு திடீர் விசிட்! வாசலில் விசில் கோலம் வரைந்த விஜய்!
Embed widget