மேலும் அறிய

USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு

USA Iran War: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியில் 10 நிமிடங்களிலேயே 100 ஏவுகணைகளை செலுத்தி. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

USA Iran War: ஈரான் உடனான போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என இஸ்ரேல் கவலை தெரிவித்துள்ளது.

10 நிமிடங்களில் 100+ ஏவுகணைகள்:

ஈரான் உடன் 2 வாரங்களுக்கு இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்து 24 மணி நேரம் கூட முழுமையடைவில்லை. அதற்குள், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதல் காரணமாக, ஹார்மஸ் நீர்வழிப்பாதையை மீண்டும் மூடுவதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. வெறும் 10 நிமிடங்களிலேயே 100-க்கும் அதிகமான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி லெபனானை இஸ்ரேல் திணறடித்துள்ளது. போர் நிறுத்தத்தால் சர்வதேச எரிபொருள் விநியோக சங்கிலி சீரடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் உடனான அமெரிக்காவின் போர் நிறுத்தத்திற்கு வெளிப்படையாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆதரவளித்தாலும், அந்த ஒப்பந்தத்தில் லெபனான் அடங்காது எனவும் விளக்கமளித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

ஈரான் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்ததில் நட்பு நாடுகள் மீதான தாக்குதலும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. அதனை அமெரிக்காவும் ஏற்றதாலேயே போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக தெஹ்ரான் அறிவித்தது. இந்நிலையில், லெபனான் நடத்தியுள்ள தாக்குதலில் சுமார் 250 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், 500-க்கும் அதிகமானோ காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஒப்பந்தப்படி ஹார்மஸ் நீர்வழிப்பாதை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்கப்பட வேண்டுமென வெள்ளை மாளிகை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்தை விரும்பாத இஸ்ரேல்?

ஈரான் உடனான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கவில்லை என இஸ்ரேல் அதிருப்தியில் உள்ளதாம். அந்நாட்டின் கருத்தை பெறாமலேயே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி வெளியிட்டுள்ளது. நேதன்யாகு வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ”வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் பிராந்திய நட்பு நாடுகள் பகிர்ந்துகொள்ளும் இந்த இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் கொடுத்த வார்னிங்

போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதால், ஹார்மஸை உடனடியாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து வெளியேறுவோம் எனவும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பான முக்கிய முடிவுகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் முடிவில் எடுக்கப்படும் என தெரிகிறது. இதில் அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொகமது பகெர் கலிபாஃப் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

US Iran War China: சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
Iran Vs America: “இது ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கு“; வீடியோ போட்டு அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்
“இது ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கு“; வீடியோ போட்டு அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
TVK Vijay Road Show: இந்த கூட்டம் போதுமா.. சென்னையை அதிர வைத்த விஜய்.. கூடிய தொண்டர் படை!
TVK Vijay Road Show: இந்த கூட்டம் போதுமா.. சென்னையை அதிர வைத்த விஜய்.. கூடிய தொண்டர் படை!
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
CBSE 10th Results 2026: வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? நேரடி லிங்க்!
US Iran War China: சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
சத்தமில்லாமல் அமெரிக்காவை செஞ்சுவிட்ட சீனா; ஈரானுக்கு உதவிய உளவு செயற்கைக்கோள்.? முக்கிய தகவல்
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
Ukraine Vs Russia: உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
உலகை வியப்பில் ஆழ்த்திய உக்ரைன்; போர்க்களத்தில் தெறிக்கவிட்ட ரோபோக்கள்; சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
Embed widget