துபாயில் நடைபெற்றுவரும் விமான கண்காட்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், அந்த நிகழ்வின்போது, இந்திய போர் விமானமான தேஜஸ் விழுந்து நொறுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் விமானி உயிரிழந்த நிலையில், இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது.
சாகசத்தின்போது விழுந்து நொறுங்கிய தேஜஸ்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தி, பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியவாவின் தயாரிப்பான தேஜஸ் போர் விமானமும் இந்த சாகச நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய நிகழ்ச்சியின்போது, தேஜஸ் வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.
அப்போது, திடீரென யாரம் எதிர்பாராத விதமாக, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
இதில், விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “துபாய் விமான கண்காட்சியில் இன்று நடைபெற்ற வான்வழி கண்காட்சியின் போது ஐ.ஏ.எஃப் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிக்கு உயிரிழப்பு ஏற்பட்டது. உயிர் இழப்புக்கு ஐ.ஏ.எஃப் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இந்த துயரமான நேரத்தில் துயரமடைந்த குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.“ என்று தெரிவித்துள்ளது.