மேலும் அறிய

Hormuz Strait: கேட்டை ஓபன் பண்ணியாச்சு.. கீரின் சிக்னல் கொடுத்த ஈரான்! நன்றி சொன்ன டிரம்ப்

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி,லெபனானில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி  வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அரசு லெபனான் மீதான போர் நிறுத்தத்தை கொண்டு வந்ததை அடுத்து ஹார்மூஸ் நீரிணையை திறக்க ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அனைத்து நாட்டு கப்பல்களும் ஹார்மூஸ் நீரிணையை எந்த வித சிரமின்றி கடக்கலாம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. 

ஹார்மூஸ் நீரிணை திறப்பு

இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாவது லெபனானில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி  வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு  ஏற்கனவே அறிவித்துள்ள ஒருங்கிணைந்த வழித்தடத்தில், இந்த போர்நிறுத்தக் காலம் முழுவதும் கப்பல்கள் தடையின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி சொன்ன டிரம்ப்:

ஈரான் ஹார்மூஸை திறந்த சிறிது நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், "ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முழுமையாகத் திறக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்திற்குத் தயாராக உள்ளதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் தமது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் இது குறித்து பதிவிட்ட ட்ரம்ப், "மிக்க நன்றி!" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு அறிவிப்புகளும் ஹார்முஸ் நீரிணை நெருக்கடிக்கு ஒரு நேர்மறையான தீர்வு கிடைத்துள்ளதை உணர்த்துகின்றன. மேலும், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கான ஒரு சாதகமான தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது.

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம்

அமெரிக்கா - ஈரான் இடையேயான இடைக்கால போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஆன பிறகும் கூட, ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைப்பதாக கூறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 10 நாட்களுக்கு இடைக்கால போர் நிறுத்தம் மேற்கொள்ள இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது. அமெரிக்கா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் இடம்பெற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. 

பின்னணி என்ன?

லெபனானில் நிலவும் தற்காலிக அமைதிச் சூழலைத் தொடர்ந்து, சர்வதேச கடல்சார் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில், கப்பல் போக்குவரத்தை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 



About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Xi Jinping Meet: “என்னோட பழைய நண்பேன்டா.!“ ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்; சந்திப்பில் என்ன நடந்தது.?
“என்னோட பழைய நண்பேன்டா.!“ ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்; சந்திப்பில் என்ன நடந்தது.?
PM Modi UAE Visit: UAE வானில் நுழைந்த இந்திய விமானம்; சுத்துப்போட்ட F16 போர் விமானங்கள்; கெத்தாக தரையிறங்கிய மோடி.!
UAE வானில் நுழைந்த இந்திய விமானம்; சுத்துப்போட்ட F16 போர் விமானங்கள்; கெத்தாக தரையிறங்கிய மோடி.!
US Iran War: ''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
''ஹார்முஸ் ஜலசந்திய திறந்தாலும், இப்போதைக்கு பிரச்னை தீராது.!'' எச்சரிக்கும் சிங்கப்பூர் பிரதமர்
Iran Vs America: “மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
“மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!
விஜய் வசம் 16 துறைகள்! யாருக்கு என்னென்ன இலாகா? அதிகாரப்பூர்வ பட்டியல்
EPS-க்கு உதவும் ஸ்டாலின்?CM விஜய்க்கு ஸ்கெட்ச்! SP வேலுமணி அணிக்கு சிக்கல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உள்ளாட்சியை பிடிக்கணும்..! ஆரம்பத்திலேயே வேகமெடுக்கும் ஆளுங்கட்சி - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
உள்ளாட்சியை பிடிக்கணும்..! ஆரம்பத்திலேயே வேகமெடுக்கும் ஆளுங்கட்சி - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Neet Leak: ரூ.10 லட்சம் கொடுத்து வினாத்தாள் வாங்கியும், 720-க்கு 107 மார்க் தான் - பெற்றோரின் மருத்துவ பேராசை
Anitha R Radhakrishnan: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
Anitha R Radhakrishnan: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என விமர்சித்த முன்னாள் அமைச்சர்!
23 வயது கர்ப்பிணி..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
23 வயது, 5வது கரு..! மிருகத்தனமான தாக்குதல், பிறப்புறுப்பில் இரும்பு கம்பி - கொலைகார கணவனின் நாடகம்
TN Cabinet: அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
Seenu Ramasamy : திமுக தோல்விக்கு இது தான் காரணம்.! வெளிப்படையாக போட்டு உடைத்த இயக்குனர் சீனு ராமசாமி
திமுக தோல்விக்கு இது தான் காரணம்.! வெளிப்படையாக போட்டு உடைத்த இயக்குனர் சீனு ராமசாமி
Minister Raj Mohan: இயக்குநர் டூ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்... ராஜ்மோகன் கடந்து வந்த பாதை!
Minister Raj Mohan: இயக்குநர் டூ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்... ராஜ்மோகன் கடந்து வந்த பாதை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
Embed widget