மூளையை கசிக்கிப் பிழிந்து யோசித்து குழம்பிக் கொண்டிருக்கும் மனிதர்கள் உலாவும் இணைய உலகில், எளிமையான பெரிதும் சிந்திக்காத க்யூட் விலங்குகளின் வீடியோக்கள் சமீப காலமாக ஹிட் அடித்து வைரலாகி வருகின்றன.


தினம் ஒரு விலங்கின் வீடியோ இணையத்தில் ஹிட் அடிப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் முன்னதாக இரண்டு காட்டு முயல்கள் சாலையின் மத்தியில் நின்று மாறி மாறி அடித்துக் கொள்ளும் காட்சி சிரிப்பை வரவழைத்து இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.






தெருச்சண்டை எனும் கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று ஹிட் அடித்துள்ளது.


ஆங்கிலத்தில் hare எனப்படும் காட்டும் முயலுக்கும், rabbit எனப்படும் வீட்டு முயலுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. காட்டு முயல்கள் பொதுவாக தனித்தும் தன் இணையுடன் ஜோடியாக வாழ்கின்றன. ஆனால் வீட்டு முயல்கள் பொதுவாக கும்பலாகவே வாழ்கின்றன.






அதேபோல் காட்டு முயல்கள் நீண்ட உடலையும், காதுகளையும், நீண்ட பின்னங்கால்களையும் கொண்டுள்ளன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண