பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான முயற்சிகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இம்ரான் கான்:

பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரான இம்ரான் கான்,  கடந்த ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில்,  14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது அவர் மீது குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நான்காவது பெரிய வழக்காகும் என கூறப்படுகிறது. 

இவர் 2018 ஆம் ஆண்டு முதல் 2022 வரை நான்கு ஆண்டுகள் , பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார். இதையடுத்து, இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து ஏப்ரல் 2022 இல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்குப் பிறகு கான் அதிகாரத்தை இழந்தார். எனினும், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் இம்ரான் தொடர்ந்து மறுத்து வருகிறார். அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் கூறுகிறார்.

Also Read: Pakistan Earthquake: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!

நோபல் பரிசுக்கு பரிந்துரை:

கடந்த டிசம்பரில் நிறுவப்பட்ட பாகிஸ்தான் உலக கூட்டணியின் (PWA) உறுப்பினர்கள் மற்றும் நார்வே அரசியல் கட்சியான பார்ட்டியேட் சென்ட்ரமைச் சேர்ந்தவர்கள் இம்ரானை கானை  பரிந்துரைத்திருக்கின்றனர்.

இதுகுறித்து பார்ட்டியேட் சென்ட்ரம் தெரிவித்திருப்பதாவது “ பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அவரது பணிக்காக, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நோபல் அமைதிக்கான பரிசுக்கு பரிந்துரை செய்யும் உரிமை உள்ள ஒருவருடன் கூட்டணி வைத்து, பார்ட்டியேட் சென்ட்ரம் சார்பாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்று பார்ட்டியேட் சென்ட்ரம்  X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரதமருமான இம்ரான் கான் கடந்த 2019 ஆம் ஆண்டும் தெற்காசியாவில் அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நோர்வே நோபல் குழுவிற்கு, வருடந்தோரும், நூற்றுக்கணக்கான பரிந்துரைகளைப் வருகிறது. அதன் பிறகு அக்குழுவானது சுமார்  எட்டு மாத செயல்முறைக்கு பின்பு , வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

Also Read:கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?