துபாய் எக்ஸ்போ சிட்டி அனைவரும் அறிந்த இடமே. உலகின் பிரபலமான கண்காட்சித் தளம். இங்கு பல்வேறு பிரபலமான கண்காட்சிகள் அரங்கேறியுள்ளன. இப்போது அங்கு கண்காட்சிகள் நடத்துவது குறைந்துவிட்டது. இந்நிலையில் மிகவும் பிரபலமான அந்த எக்ஸ்போ சிட்டியில் உள்ள இடத்தை குடியிருப்புப் பகுதியாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.


துபாய் எக்ஸ்போ வேலியின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. 165 குடியிருப்புகள் முதலில் கட்டப்படுகின்றன. இவை 2026 ஜனவரிக்குள் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிகிறது. 4 படுக்கை அறைகள், 5 படுக்கை அறைகள், 3 படுக்கை அறைகள் கொண்ட வெவ்வேறு அளவிலான வீடுகள் கட்டப்படுகின்றன. இவற்றின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் 27 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 12 மில்லியன் திர்ஹாம் வரை விலை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.






ஒரு தற்சார்பு நகர குடியிருப்பு கட்டமைப்புக்கு இந்த எக்ஸ்போ வில்லா குடியிருப்புகள் ஒரு முன்மாதிரியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இங்கே மிதிவண்டிகளுக்கு என பிரத்யேக பாதை இருக்கும். அல் வாசில் பிளாசா, ஜூபிளி பார்க் ஆகியனவற்றிற்கு எளிதில் இங்கிருந்து சென்றுவர வழிவகை செய்யப்பட்டிருக்கும். இன்று முதல் புக்கிங் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விவரங்களுக்கு residential@expocitydubai.ae என்ற இணையத்தை அணுகலாம் என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. 






இந்த எக்ஸ்போ சிட்டியில் வீடு வாங்க மக்கள் போட்டா போட்டி போட்டு முன்பதிவு செய்வதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. இங்குள்ள வசதி வாய்ப்புகளுக்காகவும் உலகின் கவனம் ஈர்த்த இடம் என்பதற்காகவும் இந்த இடத்தில் ஒரு வில்லா புக் செய்வது இப்போது துபாய்வாசிகளுக்கு ஸ்டேட்டஸ் சிம்பள் ஆகிவிட்டது என்றால் அது மிகையாகாது. ப்ரீ புக்கிங் ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் குதூகலமடைந்துள்ளனர்.