இனி மெக்சிகோ வளைகுடா இல்லை, அமெரிக்கா வளைகுடா_தான்: டிரம்ப் உத்தரவால் உற்சாகமடைந்த எலான் மஸ்க்.!
Gulf of America: மெக்சிகோ, கனடா ஆகிய அண்டை நாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கிய டிரம்ப், ஒருபடி மேலே சென்று மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்றுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்றியது மட்டுமல்லாமல், பிப்ரவரி 9 ஆம் தேதியை அமெரிக்கா வளைகுடா தினம் என்றும் அறிவிப்பை வெப்பை வெளிட்டார். இதை, டிரம்ப்பின் ஆதரவாளரும், உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் வரவேற்பு அளித்துள்ளார்.
அதிரடி உத்தரவு பிறப்பிக்கும் டிரம்ப்:
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக, ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றார், டொனால்டு டிரம்ப். அதிபராக பதவியேற்ற தினமே, பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், மெக்ஸிகோ வளைகுடாவை மறுபெயரிடுவதற்கு வசதியாக 30 நாட்களுக்குள், அனைத்து உரிய நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உள்துறைத் துறைக்கு வழிகாட்டும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அட்லாண்டிக் பெருங்கடலுக்கும், கரீபியன் கடலுக்கு இடைபட்ட பகுதி மெக்சிகோ வளைகுடா. மெக்சிகோவில் இருந்து, பலர் அமெரிக்காவில் ஊடுறுவதாகவும், போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும் கூறி கடுமையான வரி விதிக்கும் போக்கை எடுத்தார். தற்போது, மெக்சிகோ வளைகுடாவை பெயர் மாற்றுவதாக டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப் பிரகடணம்:
"அமெரிக்க வளைகுடாவின் பெயர் மாற்றத்திற்குப் பிறகு இன்று நான் எனது முதல் பயணத்தை மேற்கொள்கிறேன்" என்று வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடலோர காவல்படை "வளைகுடா அமெரிக்கா" என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியது, இது அமெரிக்க அரசாங்கத்தின் முதல் அதிகாரப்பூர்வ புதிய பெயரைக் குறிக்கிறது என்றும் பிரகடனப்படுத்தியது.
"எனது நிர்வாகம் அமெரிக்க மகத்துவ வரலாற்றில் அமெரிக்க பெருமையை மீட்டெடுக்கும் போது, நமது மகத்தான தேசம் ஒன்று கூடி, இந்த முக்கியமான சந்தர்ப்பத்தையும், அமெரிக்க வளைகுடாவின் மறுபெயரிடுதலையும் நினைவுகூருவது பொருத்தமானது" என்று டிரம்ப் தனது பிரகடனத்தில் கூறினார்.
ஆதரவளித்த எலான் மஸ்க்
இப்போது, அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்ப், அரசியலமைப்பு மற்றும் அமெரிக்காவின் சட்டங்களால் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் காரணமாக, பிப்ரவரி 9, 2025 ஐ அமெரிக்க வளைகுடா நாளாக அறிவிக்கிறேன்," என்று டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் நிகழ்ச்சிகள், விழாக்ககளுடன் இந்த நாளைக் கடைப்பிடிக்குமாறு, பொது அதிகாரிகளுக்கும், அமெரிக்காவின் அனைத்து மக்களுக்கும், டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
இந்த தருணத்தில் உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவருமான, எலான் மஸ்க், டிரம்ப்பிற்காக தேர்தல் பரப்புரையில் களப்பணியாற்றினார். இந்நிலையில், டிர்ம்ப்பின் மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்கா வளைகுடா என அழைக்குமாறு அழைப்பு விடுத்ததற்கு எலான் மஸ்க் வரவேற்பு அளித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை சர்வதேச அமைப்புகள், இதர உலகள் நாடுகள் ஏற்றுக் கொள்ளுமா, மெக்சிகோ என்ன மாதிரியான எதிர்ப்புகளை தெரிவிக்க போகிறது என வருங்காலத்தில் தெரிய வரும்.