Watch Video : 'ஹலோ ம்யூசிஸியன்ஸ்.. கொட்டண்டம்மா..' : தூக்கத்தில் இருந்து தட்டியெழுப்பிய க்யூட் யானை..

இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இணையத்தை ஆக்கிரமிக்கும் க்யூட் விலங்குகளின் பட்டியலில் யானைகள் மிக முக்கியமானவை.

Continues below advertisement

அச்சுறுத்தும் யானைகள் தவிர்த்து இணைய வீடியோக்களை ஆக்கிரமிக்கும்  யானைகள் தங்களின் க்யூட்டான நடவடிக்கைகளால் நெட்டிசன்களை என்றுமே கவர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக ஹோட்டல் அறையில் தூங்கும் பெண் ஒருவரை யானை ஒன்று தன் தும்பிக்கையால் எழுப்பி விடும் காட்சி இணையவாசிகளை நகைப்புக்குள்ளாக்கியுள்ளது.

 

 யானைகளை தேசிய விலங்காகக் கொண்ட யானைகளின் தேசமான தாய்லாந்து நாட்டின் ரிசார்ட் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சாக்‌ஷி எனும் பெண் பகிர்ந்துள்ளார்.

யானை தன்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் வீடியோ பகிர்ந்துள்ள சாக்‌ஷி, இந்த ரிசார்ட்டில் யானைகளுக்கு உணவளித்து, அவற்றுடன் வாக்கிங் சென்று, குளிப்பாட்டி, விளையாடி என அனைத்தும் செய்து மகிழலாம் என்றும் இது மிகவும் புதுவிதமான அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாவில் 53 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோ, 2,20,000 லைக்குகளையும் பெற்று நெட்டிசன்களின் இதயங்களை வென்றுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola