பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் அதன் உரிமையாளர்கள் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கும். இதன் காரணமாக அவர்கள் வீட்டிற்கு வரவில்லை என்றால் சரியாக சாப்பிடாமல் இருப்பது அல்லது மிகவும் சோகமாக இருப்பது போன்று அவை தனது அன்பை வெளிப்படுத்தும். அந்தவகையில் இங்கு ஒரு நாய் தனது உரிமையாளர் உடல்நல குறைவால் மருத்துவமனைக்கு சென்ற போது ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் பகுதியில் ஒரு குடும்பம் வீட்டில் செல்ல பிராணியான நாய் உடன் வசித்து வந்துள்ளது. இந்தக் குடும்பத்தில் இருந்த ஒருவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனது. இதன் காரணமாக அவருக்கு வீட்டிலேயே மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த 9ஆம் தேதி திடீரென அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்ட செல்ல உறவினர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆம்புலன்ஸில் உரிமையாளரை ஏற்றியவுடன் வீட்டிலிருந்த நாயும் அதில் ஏற முயற்சி செய்துள்ளது. எனினும் அங்கு இருந்த மருத்துவ பணியாளர்கள் நாயை ஏற்றவிலை. இதனைத் தொடர்ந்து அந்த நாய் ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து மருத்துவமனை வரை ஓடி சென்றுள்ளது. பின்னர் உரிமையாளர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடும் திரும்பும் வரை மருத்துவமனை வெளியே இருந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ பதிவை 'ரைடர்ஸ்' செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கு பலரும் அந்த நாயின் அளவற்ற பாசத்தை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில
இவ்வாறு பலரும் நாயின் பாசத்தை குறிப்பிட்டு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!