ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் பிரபல தொழிலதிபரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமமன எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாங்கினார். அப்போது முதல் அவர் ட்விட்டர் தளத்தில் போடும் பதிவுகள் மிகவும் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்தவகையில் அவர் இன்று காலை கோகோ கோலா தொடர்பாக போட்டிருந்த பதிவு வேகமாக வைரலானது.




அதில், “'அடுத்து நான் கோகோ கோலாவை வாங்க போகிறேன். கோகோயினை மீண்டும் கோகோ கோலாவில் சேர்க்க போகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். அது பலரின் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோகோ கோலாவில் உண்மையில் கோகோயின் இருந்ததா? அதில் உண்மை உள்ளதா?


 


கோகோ கோலா குளிர்பானம் 1885ஆம் ஆண்டு ஜான் பெம்பர்டன் என்ற ஜார்ஜியாவைச் சேர்ந்த நபர் உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவின் பொதை பொருள் தடுப்பு பிரிவின் ஆவணங்களின்படி கோகோயின் வைத்து அவர் கோகோ கோலாவை தயாரித்து உள்ளதாக தெரிகிறது. 


 






அந்த குளிர்பான தயாரிப்பில் கோகோயின் இலை பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கோலா நட் என்ற ஒன்றையும் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த குளிர்பானத்திற்கு கோகோ-கோலா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1885ஆம் ஆண்டு அமெரிக்காவில் கோகோயின் பயன்பாட்டிற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும் அந்த கோகோயினை பலர் மருந்திற்காக பயன்படுத்தி வந்தனர். அதன்காரணமாக பெம்பர்டன் இந்த குளிர் பானத்தை ஒரு மருந்தாக பயன்படுத்த திட்டமிட்டு அதில் கோகோயினை கலந்ததாக கூறப்படுகிறது. 


 


எனினும் 1890களுக்கு பிறகு கோகோயின்பயன்பாடு அமெரிக்காவில் படிப்படியாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக கோகோயின் பயன்பாட்டை பல பொருட்கள் நிறுத்தியுள்ளன. அதற்கு முழுமையாக கட்டுப்படும் வகையில் கோகோ கோலா தயாரிப்பிலும் படிப்படியாக கோகோயின் பயன்பாட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 1929 ஆம் ஆண்டு முதல் கோகோ கோலாவில் கோகோயின் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண