பன்னாட்டு நிறுவனமான ஹில்டன், தனது நிறுவனத்தின் சர்வதேச தூதுவராக தீபிகா படுகோனை நியமனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


ஹில்டன் ஓட்டல், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. இது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தெரிவித்துள்ளதாவது, பிரபல நடிகையும் தொழிலதிபருமான தீபிகா படுகோனை ஹில்டன் குடும்பத்திற்குள் இணைந்ததை பெருமையாக  கருதுகிறோம்.


தீபிகா இந்தியாவின் உணர்வுகளை வெளிப்படுத்துவராக இருக்கிறார். இவர் ஹில்டனின் உலகளாவிய சந்தைப்படுத்துதலில் சிறந்த நபராக இருப்பார்.


 பல்வேறு நாடுகளில் பயணத்தின் போது, சரியான ஓட்டல்களில் தங்கி இருப்பதை ஏன் முக்கியம் என்பதை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும் வகையில் ஹில்டன் ஓட்டல் செயல்பட்டு கொண்டிருக்கிறது.


ஹில்டனுடன் இணைந்திருப்பதை சிறப்பான தருணமாக கருதுகிறோம். உங்களுடன் பலவற்றைப் பகிர்வதற்கு நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.






ஹில்டனுடன் இணைந்தது குறித்து பெருமிதம் கொள்வதாக  தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ளதாவது, "உலகளவில் உள்ள இந்தியர்களுக்கான ஓட்டல்களின் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்காக ஹில்டன் போன்ற உலகளாவிய பிராண்டுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்.


ஹில்டனைப் பற்றி நான் விரும்புவது என்னவென்றால், அவர்கள் தங்கி இருப்பதன் முக்கியத்துவத்தை, சரியாக புரிந்து கொள்கிறார்கள். நீங்கள் ஓட்டல் நிழைவு வாயிலில் நுழைவதற்கு முன்பே உங்கள் தேவைகளை எதிர்பார்த்து கவனித்துக்கொள்ளப்படும் வகையில் சேவை இருக்கும்.  நீங்கள் பாதுகாப்பாகவும் அன்பாகவும் கவனித்துக் கொள்ளப்படுகிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியும். இதுபோன்ற சேவைகளை ஹில்டன் வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.


 பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், சர்வதேச நிறுவனத்தில் தூதுவராக நியமனம் செய்யப்பட்டதையடுத்து, அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Also Read: Amy Jackson : அம்மாவின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மகன்.. எமி ஜாக்சன் சொன்ன சுவாரஸ்யம்..