China On Trump: பொருளாதார தடைகள் என்பது போரை மேலும் மோசமாக்கும் என, சீனா எச்சரித்துள்ளது.

Continues below advertisement

ட்ரம்ப் எச்சரிக்கை:

ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதாக இந்தியா மீது, 50 சதவிகிதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது தனது கவனத்தை சீனா பக்கம் திருப்பியுள்ளார். நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அவர் எழுதிய கடிதத்தை, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும்,, சீனா மீது 50 முதல் 100 சதவிகிதம் வரை வரி விதிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஸ்பெயினில் நடைபெற உள்ள சூழலில், ட்ரம்பி இந்த அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சீனாவும் அதற்கு தக்க பதிலடி அளித்துள்ளது.

Continues below advertisement

ட்ரம்பிற்கு சீனாவின் பதிலடி

ஸ்லொவேனியாவில் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, ட்ரம்பின் பேச்சு தொடர்பாக தனியார் ஊடகத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், “சீனா ஒரு பொறுப்பான முக்கிய நாடு, மேலும் அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் சிறந்த பதிவுகளைக் கொண்ட நாடு. போரால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, மேலும் பொருளாதார தடைகள் போர்கலை சிக்கலாக்கும். சீனா போர்களில் பங்கேற்கவோ அல்லது திட்டமிடவோ இல்லை, மேலும் சீனா செய்வது அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதும், பேச்சுவார்த்தை மூலம் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை ஊக்குவிப்பதும் ஆகும்" என விளக்கமளித்துள்ளார்

ஏத்தி விடுகிறாரா ட்ரம்ப்?

சீன அமைச்சரின் பேச்சு, அதிபர் ட்ரம்ப் போரை ஊக்குவித்து , அதன் மூலம் சுயலாபம் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டை உணர்த்துவதாக பலரும் குறிப்பிடுகின்றனர். உக்ரைன் போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவின் வருவாயை குறைக்கவே, இந்தியா மீது வரியை விதிப்பதாக இதுநாள் வரை ட்ரம்ப் பேசி வந்தார். அதேநேரம், இந்தியாவை காட்டிலும் அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வரும் சீனா மீது வெறும் 30 சதவிகிதம் வரி மட்டுமே விதித்து வந்தார். இந்நிலையில் தான், திடீர் திருப்பமாக சீனா மீதும் 50 முதல் 100 சதவிகிதம் வரி விதிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்த தொடங்கியுள்ளார்.

இயலாமையின் வெளிப்பாடு? 

முன்னாள் அதிபர் பைடனின் ஆட்சிக்காலத்தில் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடங்கியது. இதுகுறித்து தேர்தல் பரப்புரையில் பேசிய ட்ரம்ப், தான் அதிபரானால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த போரை நிறுத்துவேன் என உறுதியளித்தார். ஆனால், பதவியேற்று 9 மாதங்கள் ஆகியும் அந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் விளைவாகவே ஆரம்பித்தால் இந்தியா மீது மட்டுமே கூடுதல் வரி விதித்த ட்ரம்ப், தற்போது சீனா மீதும் கவனத்தை திருப்பியுள்ளார். இந்தியா மற்றும் சீனா மீது விதிக்கப்படும் கூடுதல் வரிகளால், அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவார்கள், இதனால் ரஷ்யாவின் வருவாய் குறைந்து உக்ரைன் மீதான போரை கைவிடும் என்பதே ட்ரம்பின் யோசனையாக உள்ளது.