உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலை கனடா கண்டிப்பதாகவும், இந்த நடவடிக்கைகள் உக்ரைனின் இறையாண்மை,பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா.வின் அறிவுரையை ரஷ்யா மீறியுள்ளாதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
இதனிடையே, ரஷ்யாவின் குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத அளவில் அழிவை சந்திக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். மேலும், உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர். உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்