Breaking LIVE: என்னை காட்டிக் கொடுக்க ஓபிஎஸ் ஒன்றும் யோக்கியர் இல்லை. அவர் சொல்லியெல்லாம் ரெய்டு நடக்காது - காமராஜ்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 கோடியே 84 லட்சத்து 33 ஆயிரத்து 562ஆக அதிகரித்துள்ளது.

ABP NADU Last Updated: 08 Jul 2022 07:05 PM
எனது சொத்து மதிப்பு, 63 கோடியை தாண்டி எனக்கு கடன் உள்ளது. இதுகுறித்து தேவையான இடத்தில் விளக்கம் கொடுப்பேன்- முன்னாள் அமைச்சர் காமராஜ்

எனது சொத்து மதிப்பு, 63 கோடியை தாண்டி எனக்கு கடன் உள்ளது. இதுகுறித்து தேவையான இடத்தில் விளக்கம் கொடுப்பேன்- முன்னாள் அமைச்சர் காமராஜ்

என்னை காட்டிக் கொடுக்க ஓபிஎஸ் ஒன்றும் யோக்கியர் இல்லை. அவர் சொல்லியெல்லாம் ரெய்டு நடக்காது - காமராஜ்

என்னை காட்டிக் கொடுக்க ஓபிஎஸ் ஒன்றும் யோக்கியர் இல்லை. அவர் சொல்லியெல்லாம் ரெய்டு நடக்காது - காமராஜ்

இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் காமராஜ்

இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதனை நான் அரசியல் ரீதியாக எதிர்கொள்வேன் .இந்த சோதனையெல்லாம் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. - காமராஜ்

இது கட்சிக்கான வழக்கல்ல, தனி நபர் தேவைக்கான வழக்குதான் இது - ஈ.பி.எஸ்

இது கட்சிக்கான வழக்கல்ல, தனி நபர் தேவைக்கான வழக்குதான் இது - ஈ.பி.எஸ்

பிரச்சினைகள் குறித்து ஒ.பி.எஸ் பொதுக்குழுவில் தான் விவாதித்திருக்க வேண்டும்.. நீதிமன்றத்துக்கு வந்திருக்க கூடாது. - ஈ.பி.எஸ்

பிரச்சினைகள் குறித்து ஒ.பி.எஸ் பொதுக்குழுவில்தான் விவாதித்திருக்க வேண்டும்.. நீதிமன்றத்துக்கு வந்திருக்க கூடாது.


15 நாட்கள் நோட்டீஸ் கொடுக்கவில்லை என்ற கோரிக்கை ஒ.பி.எஸ். மனுவிலேயே இல்லை

முன்னாள் ஜப்பான் பிரதமர் உயிரிழப்புக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி

கட்சி விதிகளைத் திருத்த பொதுக்குழுவுக்கே அதிகாரம் - ஈ.பி.எஸ்

கட்சி விதிகளைத் திருத்த பொதுக்குழுவுக்கே அதிகாரம் - ஈ.பி.எஸ்

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை..! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

காமராஜிக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி., லஞ்சஒழிப்புத்துறை சோதனை...!

முன்னாள் அமைச்சர் காமராஜிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினரும், லஞ்சஒழிப்புத்துறையினரும் இணைந்து செய்து வருகின்றனர். 

காமராஜ் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடக்கும் நிலையில் வருமான வரித்துறையும் வருகை 

ஜனவரி மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தலாம் : அரசு

ஜனவரி முதல் மே மாதம் வரையே ஜல்லிக்கட்டு, வட மாடு, மஞ்சுவிரட்டு நடத்த முடியும் என விதி

தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 

கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தகவல்!

பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கபப்ட்டுள்ளாதாக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சி,பி.எஸ். இ. தேர்வு முடிவுகள் வெளியான 5 நாட்கள் பிறகும் விண்ணப்பிக்கலாம் எனத் தகவல்.

கோடநாடு வழக்கு- இரண்டாவது நாளாக தொடரும் விசாரணை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் மகன் செந்தில்குமார் என்பவரிடம்  2- வது நாளாக விசாரனை நடைபெற்று வருகிறது. 2017 ஆம் ஆண்டு வருமான வரிதுறையினால் பறிமுதல் செய்யபப்ட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை .

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,815 ஆக பதிவாகியுள்ளது!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,815 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைக்கு பதிவான 18,930 விட குறைவு என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

ஜப்பான் நாட்டில் உள்ள நாரா நகரில் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியுல் பேசிக்கொண்டிருந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

அச்சரப்பாக்கம் அருகே கோர விபத்து..! 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு..!

அச்சரப்பாக்கம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப்பேருந்து மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து காமராஜ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இன்பன், இனியன் மற்றும் காமராஜின் சம்பந்தி ஆகியோரது வீடு, அலுவலகங்கள் ஆகிய இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, தஞ்சை, திருவாரூர் என மொத்தம் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை...!

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 58 கோடிக்கும் அதிகமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு: பேருந்து- லாரி மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை தொழுப்பேடு அருகே பேருந்தும், லாரியும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 5 பேரி உயிரிழந்துள்ளனர்.  10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

Background

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான்  நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் முதல் கோவிட் தொற்று உறுதியானது.


அன்று தொடங்கி கோவிட் தொற்று உலகின் 228 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 கோடியே 84 லட்சத்து 33 ஆயிரத்து 562ஆக அதிகரித்துள்ளது.


மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63 லட்சத்து 68 ஆயிரத்து 770ஆக அதிகரித்துள்ளது. கொரொனா தொற்றிலிருந்து உலகம் முழுவதும் மீண்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 19 லட்சத்து 85 ஆயிரத்து 957ஆக உள்ளது.






 


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் அதிக கொரோனா வழக்குகள் பதிவாகி உள்ளன.


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 320 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 297 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியா முழுவதும் இதுவரை மொத்தம் 4 கோடியே 35 லட்சத்து 87 ஆயிரத்து 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 305 பேர் உயிரிழந்து நிலையில், 4 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 977 பேர் மீண்டுள்ளனர்.


மேலும் படிக்க:Sri Lanka's Tea production risk: இலங்கையில் தேயிலை உற்பத்தி துறை வீழ்ச்சி அடையும் அபாயம்; 10 லட்சம் பேர் வேலையிழக்க வாய்ப்பு


UK Prime Minister Resignation: சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு..அமைச்சர்கள் ராஜினாமா.. பதவி விலகினார் போரிஸ் ஜான்சன்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.