இப்படி ஒரு கொடுமையா? யூ ட்யூப்பை பார்த்து தனக்குத்தானே மூக்கு ஆபரேஷன்.. நடந்த விபரீதம் தெரியுமா?

யூடியூப்பை பார்த்து தானாகவே தன்னுடைய மூக்கை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

Continues below advertisement

யூடியூப்பை பார்த்து மூக்கு அறுவை சிகிச்சை செய்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Continues below advertisement

யூடியூப்பில் இல்லாத வீடியோவே இல்லை. அனைத்து விதமான வீடியோக்களும் அங்கு கொட்டிக்கிடக்கின்றன. அதேவேளையில் அந்த யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பல அபாயகரமான விஷயங்களும் உலகத்தில் நடக்கின்றன. யூடியூப்பை பார்த்து துப்பாக்கி செய்வது, யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு செய்வது என பலரும் சட்டத்துக்கு புறம்பான வேலைகளையும் செய்து வருகின்றனர். இது மாதிரியான வீடியோக்களுக்கு யூடியூப் தடை போட்டாலும் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்துதான் வருகின்றன. 

அப்படியான ஒரு சம்பவம் தற்போது பிரேசிலில் நடந்துள்ளது. பிரேசிலில் ஒருவர் யூடியூப்பை பார்த்து மூக்கை அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால் அறுவை சிகிச்சையை சரிவர முடிக்க முடியாததால் அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நபர் தனது சொந்த முகத்தில் ரைனோபிளாஸ்டி செய்யும் முயற்சியை மேற்கொண்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்


அந்த நபர் யூடியூப்பை பார்த்து தானாகவே தன்னுடைய மூக்கை அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் கையில் கையுறை போடாமலே ஆல்கஹாலை பயன்படுத்தி இந்த ஆபரேஷனை அவர் செய்துள்ளார். பாதி ஆபரேஷனுடன் வந்த நபருக்கு மருத்துவர்கள்  அன்றே அவசர சிகிச்சை செய்துள்ளனர். 

இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், வீட்டில் இருந்தே சிகிச்சை என்பது மிகவும் அபாயகரமான ஒன்று. யாரும் இதனை முயற்சி செய்யக் கூடாது. கண்ட பொருட்களை எல்லாம் பயன்படுத்தினால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்படியான நடைமுறைகள் தோற்றத்தை மேலும் மோசமாக்கும். இந்த மாதிரியான ஆபரேஷன்கள் அபாயத்தை மட்டுமே கொண்டு வரும். இது சிக்கலைத்தான் கொண்டு வரும் என்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர் யூடியூப்  இதுமாதிரியான வீடியோக்களை தடை செய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். யூடியூப் தொடர்ந்து பல அவசர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக அமெரிக்காவில் 22 முதல் 24 வார கருவினை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக் கொள்ளலாம். இதனை தான் அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை அடுத்து அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்கள் கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவித்துள்ளன.இதனையடுத்து, மருத்துவ நடைமுறை குறித்த தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கையில் கருக்கலைப்பு குறித்த தவறான கூற்றுகள் அடங்கிய வீடியோக்களை அகற்றத் தொடங்கியுள்ளது.  அமெரிக்கா முழுவதும் பல பகுதிகளில் கருக்கலைப்புக்கான உரிமை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பெண்கள் நம்பகமான கர்ப்பம் தொடர்பான தகவல்களை ஆன்லைனில் தேடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement