ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசு இன்று ( பிப்.15 )சமூக வலைதளத்தில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது காதலி, காதலை ஏற்றுக் கொண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக, தனது காதலியுடன் செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுவின் காதலி ஜோடி ஹெய்டன். இவர்கள் இருவரும், 2020 ஆம் ஆண்டு முதன் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த பிரதமர் தேர்தலிலும் அந்தோனிக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஹெய்டன் தேர்தல் பரப்புரைக்கு சென்றார். பின்னர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டு பயணங்களின்போதும் ஹெய்டனை, அந்தோனி அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.


இந்நிலையில், தனது காதலி, காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டார் என்று, இருவரும் இணைந்த புகைப்படத்தை, பிரதமர் அந்தோனி சமூக வலைதளங்களில் தெரிவித்தார். இதையடுத்து, பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


அந்தோனி, தனது முதல் மனைவியை 2019 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டதாகவும். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.






60 வயதான பிரதமர், 46 வயதான ஹெய்டனை நிச்சயம் செய்ததை பார்க்கையில், காதலுக்கு வயது என்பது தடையே இல்லை என்றும், காதலுக்கு காதல் மட்டுமே இருந்தால் போதும் என்பதையும் காண்பிக்கிறது.


Also Read: Amy Jackson : அம்மாவின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த மகன்.. எமி ஜாக்சன் சொன்ன சுவாரஸ்யம்..