மேலும் அறிய

US Threat Khamenei Escape: அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி

ஈரானை அச்சுறுத்தும் வகையில் வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவித்து வரும் நிலையில், 37 வருட பாரம்பரியத்தை கைவிட்டு, ஒரு முக்கியமான நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார் ஈரான் தலைவர் காமேனி.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு ஏற்கனவே தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், வளைகுடா பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் நடைபெற்ற விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பை, அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தவிர்த்துள்ளார். இதன் மூலம், 37 ஆண்டுகளாக இந்நிகழ்வில் பங்கேற்பதை பாரம்பரியமாக வைத்திருப்பதை அவர் தவற விட்டுள்ளார். அது எதனால் என்பதை பார்ப்போம்.

37 வருடங்களாக அவர் கடைபிடித்தது என்ன.?

ஈரானில், ஒவ்வொர வருடமும் பிப்ரவரி 8-ம் தேதி, விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. 1989-ம் ஆண்டு தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து, கோவிட்-19  தொற்றுநோய் பரவிய காலகட்டம் உட்பட, காமேனி ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக ஈரான் இன்டர்நேஷனல் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த வருடாந்திர கூட்டம், 1979 பிப்ரவரி 8-ம் தேதி அன்று, பஹ்லவி வம்சத்தை தூக்கியெறிய ருஹோல்லா காமேனிக்கு விசுவாசமாக இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் குழு உறுதியளித்ததைக் குறிக்கிறது. கோமேனி இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் மற்றும் காமேனியின் முன்னோடி உச்ச தலைவராக இருந்தார்.

அடுத்த நான்கு தசாப்தங்களில், அந்த நாள் ஒரு அடையாள நிகழ்வாக மாறியது. விமானப்படை வீரர்கள் மற்றும் தளபதிகள், ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் ஈரானின் மதகுருமார் தலைமையைச் சந்தித்தனர். இந்த ஆண்டு, காமேனிக்கு பதிலாக, ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி, ராணுவ விமானப்படைத் தளபதிகளைச் சந்தித்ததாக அறிக்கை கூறுகிறது.

காமேனி தவிர்த்ததன் காரணம் என்ன.?

ஈரானை ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், எந்த நேரமும் தாக்குதல் நடைபெறலாம் என்ற பதற்றம் அந்த பிராந்தியத்தில் நிலவி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் அப்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை அதிக அளவில் குவித்து வருகிறது.

அமெரிக்காவின் எந்த ஒரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதனிடையே, இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. எனினும், தாக்குதலுக்கான சூழலும் நிலவி வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான விஷயங்களை ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் ஏற்கனவே கூறப்பட்டது.

இந்த சூழலில், எந்த ஒரு அசம்பாவிதங்களையும் தவிர்க்கும் விதமாகவே, விமானப்படை தளபதிகளை சந்திக்கும் தனது 37 ஆண்டுகால பாரம்பரிய நடைமுறையை, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தவிர்த்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்கா போரை தொடங்கினால், அது பிராந்திய போராக மாறும் என்று காமேனி ஏற்கனவே எச்சரித்திருந்தார். அதை சோதிப்பதற்காகவே ட்ரம்ப் தாக்குதலை நடத்தப் போவதாக சூசகமாக தெரிவித்திருந்தார்.

படைகளை குவித்துவரும் அமெரிக்காவால் பதற்றம்

இந்த சூழலில், ஜனவரி மாத இறுதியில், அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலான USS ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலுக்கு அனுப்பியது. கடந்த வாரம், ஜோர்டானில் உள்ள முவாஃபாக் சால்டி விமானத் தளத்திற்கு ஒரு டஜன் F-15 போர் விமானங்கள், ஒரு MQ-9 ரீப்பர் போர் ட்ரோன் மற்றும் பல A-10C தண்டர்போல்ட் II தரைவழித் தாக்குதல் விமானங்கள் வந்ததாக BBC செய்தி வெளியிட்டது.

வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் கப்பலான USS Delbert D Black, எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலில் இருந்து, செங்கடல் வரை பயணிப்பதையும், அமெரிக்க கடற்படை MQ-4C ட்ரைடன் கண்காணிப்பு ட்ரோன் வளைகுடாவில் இயங்குவதையும் காட்டும் செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்ததாக, பிரிட்டிஷ் வெளியீடு தெரிவித்துள்ளது. E-11A தகவல் தொடர்பு விமானம், P-8 Poseidon மற்றும் E-3G Sentry கண்காணிப்பு மற்றும் உளவு விமானங்கள் இருப்பதும் இப்பகுதியில் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.

இதனால், அமெரிக்கா எந்த நேரமும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் அப்பகுதியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Hormuz strait:
Hormuz strait: "வெறும் 33 கி.மீ தான்... ஆனால் உலகையே மிரட்டும் ஹார்முஸ்.. ஏன் அகலப்படுத்தவில்லை?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget