US H-1B Visa Fee: ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
டொனால்ட் ட்ரம்ப் விதித்த 1,00,000 டாலர் எச்-1பி விசா கட்டணம், காங்கிரஸால் அங்கீகரிக்கப்படாத ஒரு சட்டவிரோத வரி என தீர்ப்பளித்து, அமெரிக்க நீதிபதி ஒருவர் கட்டணத்தை ரத்து செய்துள்ளார்.

உயர் திறன் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த 100,000 டாலர் கட்டணத்தை, அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி ஒருவர் ரத்து செய்துள்ளார். இந்த கட்டணம், காங்கிரஸால் அங்கீகரிக்கப்படாத ஒரு சட்டவிரோத வரி என்று அவர் தீர்ப்பளித்துள்ளார். செப்டம்பரில் ட்ரம்ப் அறிவித்த இந்த கட்டண நடவடிக்கையை எதிர்த்து, 20 ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மாநில அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கில், பாஸ்டனில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி லியோ சொரோகின் நேற்று இந்த தீர்ப்பை வழங்கினார்.
நீதிமன்றத் தீர்ப்பு
புதிய H-1B விசா விண்ணப்பங்கள் மீதான 1,00,000 டாலர் கட்டணம் சட்டவிரோதமானது என்றும், அது செல்லாததாக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி லியோ சொரோகின் தீர்ப்பளித்தார். இந்த கட்டணம், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாத ஒரு வரியாகவே திறம்பட செயல்பட்டது என்று நீதிமன்றம் முடிவு செய்தது.
உயர் திறன் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எச்-1பி விசாக்களை பெறுவதற்கான செலவை கணிசமாக உயர்த்துவதற்கான அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு இந்த தீர்ப்பு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
ட்ரம்ப்பின் முடிவுக்க எழுந்த சட்ட சவால்
கடந்த வருடம் செப்டம்பரில் இந்த கட்டணம் அறிவிக்கப்பட்ட உடனேயே, 20 ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மாநில அரசு வழக்கறிஞர்கள், அதை எதிர்த்து இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.
மேலும், அமெரிக்க வர்த்தக சபை மற்றும் ஒரு செவிலியர் ஆட்சேர்ப்பு நிறுவனம் ஆகியவையும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிராக 2 தனித்தனி வழக்குகளை தாக்கல் செய்துள்ளன.
இந்த சட்ட சவாலைத் தொடர்ந்து, பாஸ்டன் கூட்டாட்சி நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்து, அந்த கட்டணத்தை செல்லாதது என அறிவித்தது.
ட்ரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு.?
குடியேற்றத்தை கட்டுப்படுத்தி, அமெரிக்க தொழிலாளர்களுக்கான தேவையை அதிகரிப்பதற்காகவே, அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இத்த விசா கட்டணத்தை அமல்படுத்தியது. இந்நிலையில், தற்போது நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை அளித்துள்ளதால், ட்ரம்ப்பின் பிரசாரத்திற்கு இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதனால், எச்-1பி விசா கட்டணத்தை ரத்து செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
H-1B விசா திட்டம்
H-1B விசா திட்டம் என்பது, வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றத்தின் ஒரு முக்கியமான அங்கம். இந்த விசா, அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், கல்லூரி பட்டம் பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களை சிறப்பு தொழில்களுக்காக பணியமர்த்த அனுமதிக்கிறது. H-1B விசாக்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டாலும், அவை முதன்மையாக தொழில்நுட்பத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்க அரசாங்கத்தின் தகவல்படி, அமேசான்.காம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மைக்ரோசாஃப்ட், மெட்டா மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள், அதிக எண்ணிக்கையிலான H-1B விசாக்களை கொண்ட நிறுவனங்களில் அடங்கும்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















