மேலும் அறிய

Pak-US: “டாய்லெட் பேப்பர விட மோசமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க” நாடாளுமன்றத்தில் பாக்., அமைச்சர் புலம்பல்

Pak Khawaja Asif: அமெரிக்கா தங்களை கழிவறைக்கான காகிதத்தை விட மோசமாக பயன்படுத்திக் கொண்டதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே வேதனை தெரிவித்துள்ளார்.

Pak Khawaja Asif: அமெரிக்கா உடனான கடந்த கால உறவுகளை குறிப்பிட்டு, அநாட்டை பாகிஸ்தான் பாதுகப்பு அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். 

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் புலம்பல்:

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், அமெரிக்கா தங்களது சுயநலனுக்காக லாகூரை சுரண்டிக் கொண்டு, வேலை முடிந்ததும் கழிவறை காகித்தத்தை விட மோசமாக நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையிலான மிகப்பெரிய ஒப்புதலாக இது கருதப்படுகிறது.  அவையில் பேசிய கவாஜா, ”1999 க்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவுடன் கூட்டணி வைக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு, குறிப்பாக ஆப்கானிஸ்தான் தொடர்பாக தங்களுக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஆதரவைப் பின்தொடர்வது ஒரு மிகப்பெரிய தவறான கணக்கீடு. அதன் விளைவுகளை பாகிஸ்தான் பல தசாப்தங்களுக்குப் பிறகும் தொடர்ந்து அனுபவிக்கும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

”கழிவறை காகிதத்தை விட மோசம்”

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை குறிப்பிட்டு பேசிய கவாஜா, “முன்னாள் ராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோர் பாகிஸ்தானை வெளிப்புறப் போர்களில் சிக்க வைத்தனர்.  நட்பு நாடுகள் அதிலிருந்து விலகிச் சென்ற பிறகும் அதன் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அமெரிக்கவின் தேவைக்காக நம்மை பயன்படுத்திக் கொண்டு, தேவை முடிந்ததும் தூக்கி எறிந்தது. அந்த நேரத்தில் கழிவறை காகிதத்தை விட மோசமாக பாகிஸ்தான் மதிக்கப்பட்டது. இதனால் சந்தித்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. அந்த முடிவுகள் திருத்த முடியாத தவறுகள். அவை பாகிஸ்தானை மோதல்களின்போது மற்றவர்களால் இயக்கப்படும் பகடைக்காயாக மாற்றின” எனவும் தெரிவித்தார்.

தேவையில்லாத போர்கள்..

பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக கூறி வந்த பல தகவல்களையும் கவாஜா நிராகரித்துள்ளார். அதன்படி, “ஆஃப்கானிஸ்தான் மோதலில் பாகிஸ்தானின் தலையீடு என்பது மதக் கடமையின் பேரில் முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மையில்லை. பாகிஸ்தானியர்கள் அணி திரட்டப்பட்டு ஜிஹாத் என்ற பேரில் போராட அங்கு அனுப்பப்பட்டனர். இது அழிவுகரமான செயல். இந்த போர்களை நியாயப்படுத்தும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட கல்வி நடைமுறை இன்று வரை பல கருத்தியல் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

1980 களில் ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத்திற்கு எதிரான போரானது, எந்தவொரு உண்மையான மதக் கட்டாயமும் இன்றி, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தனக்கு அவசியமற்ற மோதல்களில் பங்கேற்றது நாட்டில் நீண்டகால உறுதியற்ற தன்மையையும் சமூக சேதத்தையும் உருவாக்கியது, இது இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை” எனவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பேசியிருக்கிறார். இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்.. 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'.. கார்க் தீவை முடித்துவிட்ட டிரம்ப்.. அடுத்து எண்ணெய் தான்!
Donald Trump: ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம்.. 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி'.. கார்க் தீவை முடித்துவிட்ட டிரம்ப்.. அடுத்து எண்ணெய் தான்!
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Crude Oil Products: பெட்ரோல் முதல் தார் வரை.. கச்சா எண்ணெயில் இருந்து இவ்ளோ எடுக்குறாங்களா?
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
Embed widget