அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபின், அங்குள்ள சட்டவிரோக குடியேறிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நாடு கடத்தப்படுபவர்களை விலக்கிட்டு அனுப்பி வைக்கும் அமெரிக்க அரசிற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், வெள்ளை மாறிகை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதை பார்த்து எலான் மஸ்க் சிரித்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


வெள்ளை மாளிகை வெளியிட்ட வீடியோ


அமெரிக்காவில், ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதிலிருந்து, அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அவரவர்கள் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நாடு கடத்தப்படுபவர்களை, கை, கால்களில் விலங்கிட்டு அமெரிக்கா அனுப்பி வைத்துவருவதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், ASMR: Illegal Alien Deportation Flight, அதாவது சட்டவிரோத ஏலியன் நாடுகடத்தல் விமானம் என குறிப்பிட்டு, வெள்ளை மாளிகை தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டள்ளது. அதில், நாடுகடத்தப்படுவோரின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்படுவதை, இயற்கையான ஒலியுடன் வெளியிடப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






 


இந்த வீடியோ வெளியான நிலையில், இதை தனது எக்ஸ் பக்கத்தில் மறுபதிவிட்டுள்ள எலான் மஸ்க், ஹாஹா வாவ் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, அவரது இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



 


இதையும் படியுங்கள்: Space X Record: முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...