மேலும் அறிய

Venezuela Crude Oil Reliance: அம்பானிக்கு அடித்த யோகம்.! வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி; ரிலையன்சுக்கு அமெரிக்கா அனுமதி

வெனிசுலாவிலிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியாவன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

வெனிசுலாவில் உள்ள கச்சா எண்ணெய் இருப்பை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அமெரிக்கா, தற்போது,  அந்நாட்டிலிருந்து நேரடியாக கச்சா எண்ணயை இறக்குமதி செய்ய, இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலாவை கட்டுப்படுத்தும் அமெரிக்கா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிற்குள் திடீரென அதிரடியாக புகுந்த அமெரிக்க படைகள், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து, அமெரிக்காவிற்கு நாடு கடத்தினர்.

அதைத் தொடர்ந்து, அவர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாத வழக்கு தொடரப்பட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றவே அமெரிக்கா இவ்வாறு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனை நிரூபிக்கும் வகையில், வெனிசுலாவில் இருப்பில் உள்ள மொத்த கச்சா எண்ணெயையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு, வெனிசுலாவின் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ள துணை அதிபராக இருந்த சிலியா புளோரஸ் ஒத்துழைப்பு அளித்துள்ளார்.

இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்த ட்ரம்ப்

இதைத் தொடர்ந்து, ரஷ்யா, ஈரானை விடுத்து, வெனிசுலா கச்சா எண்ணெயை தங்களிடமிருந்து வாங்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதைத் தொடர்ந்து, சமீபத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியான நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய மாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இதற்கு இந்தியாவிடமிருந்து இன்னும் எந்த எதிர்வினையும் வெளிப்படாத நிலையில், இந்தியாவிற்காக ரஷ்யா குரல் கொடுத்தது. யாருடன் வர்த்தகம் செய்வது என்ற முடிவை எடுக்க இந்தியாவிற்கு உரிமையுள்ளதாகவும், அமெரிக்கா தேவையில்லாத அழுத்தத்தை கொடுப்பதாகவும் கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி.?

இப்படிப்பட்ட சூழலில் தான், பல்வேறு துறைகளில் தடம் பதித்து இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வெனிசுலாவில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய, அமெரிக்கா பொது உரிமம் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலாவை கைப்பற்றும் வரை, அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்திருந்தது. ஆனால், அந்நாட்டு அதிபரை கைப்பற்றி, வெனிசுலாவை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அமெரிக்கா, அந்நாட்டு எரிசக்தித் துறை மீதான தடைகளை தளர்த்தியுள்ளது.

இந்த நிலையில் தான், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இடைத்தரகு நிறுவனங்கள் மூலம் இந்த மாதம் 20 லட்சம் பீப்பாய் வெனிசுலா கச்சா எண்ணெயை இந்நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால், தற்போது நேரடியாக இறக்குமதி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளது.

இதனால், ரஷ்யாவைத் தொடர்ந்து, வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் கிடைக்க இந்தியாவிற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவிற்கான வரியை  ட்ரம்ப் குறைத்த நிலையில், தற்போது இந்த அனுமதி கிடைத்துள்ளது. இது இந்தியாவிற்கு சாதகமாகவே கருதப்படுகிறது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
Embed widget