அல்-கொய்தா தலைவர் கொலை:
”நீங்கள் எவ்வளவு ரகசியமான இடத்தில் பதுங்கி இருந்தாலும், எத்தனை காலம் எடுத்தாலும், அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பின், உங்களைக் அழித்துவிடுவோம்” என்று உறுதி அளித்திருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அதற்கு சாட்சியாக நிற்கிறது, அல்-கொய்தா தலைவராக இருந்த அய்மன் அல்-ஜவாஹிரி அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. டிரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றிருக்கும் செய்தி.
ஒசாமா-பின்- லேடனுக்குப் பிறகு தலைவராக இருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கண் மருத்துவம் படித்து கெய்ரோ புறநகரில் கிளினிக் வைத்திருந்த அய்மன் அல்-ஜவாஹிரி அல்-கொய்தா அமைப்பில் இணைந்தது எப்படி, அல்-கொய்தாவின் தலைவரானது எப்படி? அய்மன் அல்-ஜவாஹிரி யார்? -இந்த கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
71 வயதான அய்மன் அல்-ஜவாஹிரி, அமெரிக்காவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக அமைந்தவர். 2001, செப்டம்பர்,11 அன்று நடந்த இரட்டை கோபுர தாகுக்குதலுக்கு முக்கியமான காரணமானவர்.
அவருக்கு விடுதலை கிடைத்ததும் சவூதி அரேபியா சென்ற ஜவாஹிரி, பாகிஸ்தானின் பெஷாவர், ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து, எகிப்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கு ஆதரவு திரட்டினார். ஒரு மருத்துவராகவே அளித்தபடி ரகசியமாக தாக்குதல் நடத்தியதால் பலருக்கும் இவர் மீது எவ்வித சந்தேகமும் எழவில்லை. மருத்துவராக இவர் மீது நம்பிக்கை இருந்து வந்தது. அவரது அமைப்பு தொடர்ச்சியாக எகிப்தில் தாக்குதல் நடத்தி பலரையும் கொன்று குவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் சோவியத் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜவாஹிரி சென்றார். அங்குதான் இவர் ஒசாமா- பின் - லேடனை (Osama bin Laden ) சந்தித்தார். இருவரும் "Afghan Arabs.” என்ற வகையில் ஒன்றிணைந்தனர்.
தொடங்கிய அல்-கொய்தா (al Qaeda)பயணம்:
அல்-கொய்தா அமைப்பும் ஜவாஹிரியும்:
அல்-கொய்தா அமைப்பில் இணைந்ததும், ஜவாஹிரி பல்வேறு தாகுக்குதலுக்கு திட்டமிடுவது வழக்கமானது. கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தாக்குதலுக்கு உள்ளானது, ஜவாஹிரியின் திட்டமிடுதல்தான். அது தற்கொலை படை தாக்குதல். 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்; 5000 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
2000 ஆம் ஆண்டு அக்டோபரில் ஏமனில் நடந்த தாக்குதல், அமெரிக்காவில் படகு ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதல் இவர் தலைமையில் நடந்தது.
2011, செப்டம்பர்,11 அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் இவருடைய திட்டம். அதில் 3000 பேர் உயிரிழந்தனர். இதோடு மட்டுமல்லாமல், பலர் விடீயோக்களில் ஜவாஹிரி பேசியுள்ளார். ‘ நாங்கள் இழந்த உரிமைகளை பெறவே முயற்சிக்கிறோம்.’ என்று பேசியிருந்தார்.
ஜவாஹிரி அல்-கொய்தா அமைப்பும் தலைவர்:
2011-ல் ஒசாமா -பின் -லேடன் கொல்லப்பட்ட பிறகு, அல்-கொய்தா அமைப்பை வழிநடத்தி வருகிறார் ஜவாஹிரி. இந்த அமைப்பின் தலைவராக ஜவாஹிரி மிகச் சிறந்தவர் என்று கூறிவிட முடியாது. ஆனால், இவர் அச்சுறுத்தும் பல்வேறு செயல்களுக்காக திட்டமிட்டிருந்தார். இவர் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால், அல்-கொய்தாவின் வலிமை தீவிரமாக இல்லை.
அய்மன் அல்-ஜவாஹிரி, ஜூலை, 13 அன்று அல்-கொய்தாவின் ஊடகப் பிரிவுக்கு ஆடியோ மெசேஜ் செய்திருந்ததுதான் இறுதியான உரையாடல்.