ஆப்கானிஸ்தானில் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டிடத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைநகர் காபூலில் உள்ள அமைச்சகத்தின் கட்டிடத்திற்கு வெளியே இன்று மதியம் வெடுகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது.


சம்பவ இடத்திற்கு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்த வண்ணம் இருக்கிறது. இதுகுறித்து ரஷிய செய்தி நிறுவனம் ஸ்புட்னிக் வெளியிட்ட தகவலில், அமைச்சகத்தின் நுழைவாயிலுக்கு வெளியே வெடிகுண்டு, துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.


இந்த மாத தொடக்கத்தில் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.


காபூலில் நடந்த முந்தைய குண்டுவெடிப்புக்கு காரணமானவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், 2021இல் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதில் இருந்து ஐஎஸ் பயங்கரவாத குழுவின் பிராந்திய அமைப்பான Khorasan தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.


அவர்கள் தலிபான் ரோந்துப் படையினரையும் ஆப்கானிஸ்தானின் ஷியைட் சிறுபான்மையினரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


காபூலில் முந்தைய குண்டுவெடிப்புக்கு காரணமானவரின் அடையாளம் தெரியவில்லை. இருப்பினும், 2021 இல் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதில் இருந்து ஐஎஸ் பயங்கரவாத குழுவின் பிராந்திய துணை அமைப்பான Khorasan தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.


அவர்கள் தலிபான் ரோந்துப் படையினரையும் ஆப்கானிஸ்தானின் ஷியைட் சிறுபான்மையினரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


ராணுவ விமான நிலையம் சிவில் விமான நிலையத்திலிருந்து 200 மீட்டர் (219 கெஜம்) தொலைவில் அமைந்துள்ளது. உள்துறை அமைச்சகத்திற்கு அருகில் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் குறைந்தபட்சம் நான்கு பேர் கொல்லப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலும் இங்குதான் நடந்தது.


 






குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் நேரடியாக புகைப்படங்கள் எடுக்கப்படுவதையும் வீடியோ எடுக்கப்படுவதையும் தலிபான்கள் தடுத்து வருகின்றனர். ஆனால், அங்கு அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி சேதமடைந்ததாக தெரிகிறது.


விமான நிலைய சாலையில் இந்த சோதனை சாவடி அமைந்துள்ளது. விமான நிலைய சாலை செல்லும் பாதையில் அரசு அமைச்சகங்களின் கட்டிடங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், அதிபர் மாளிகை  அமைந்துள்ளது.