சீன ராணுவத்தின் ஆறு கப்பல்கள், 51 விமானங்கள் தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலைமையை கண்காணித்து வருவதாகவும் விமானப்படை, கடற்படை கப்பல் மற்றும் நிலத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணை செயல்பாடுகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தைவான் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
நேற்று, சீன ராணுவத்தின் 17 விமானங்கள், ஐந்து கப்பல்கள் தைவான் ஜலசந்தியை கடந்து உள்ளே சென்றுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தைலாந்துக்கு சென்றுள்ள நிலையில், சீன ராணுவத்தின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் தைலாந்து எல்லை பகுதிக்கு உள்ளே நுழைந்தன.
17 சீன ராணுவ விமானப்படை (PLAAF) விமானங்களில், நான்கு சுகோய் சு-30 போர் விமானங்கள், மூன்று ஷென்யாங் ஜே-11 ஜெட் போர் விமானங்கள், இரண்டு ஷென்யாங் ஜே-16 ஜெட் போர் விமானங்கள் மற்றும் ஒரு ஷான்சி ஒய்-8 போக்குவரத்து விமானம் உள்பட 10 சீன விமானங்கள் தைவான் ஜலசந்தியின் இடைக் கோட்டைக் கடந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
பதிலடியாக, போர் ரோந்து விமானங்கள் மற்றும் கப்பல்களை தைவான் அனுப்பி உள்ள அதே நேரத்தில் சீன விமானம் மற்றும் கடற்படை கப்பல்களை கண்காணிக்க கடற்கரை ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்திற்கு முன்னதாகவே சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது. "தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியாகப் பாதுகாக்க உறுதியான மற்றும் வலிமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும்" என சீன தெரிவித்திருந்தது. கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்க அரசில் உயர் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் தாய்வானுக்கு செல்வது இதுவே முதல்முறை.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஏற்பட்ட 1949 ஆம் ஆண்டு உள்ளூர் போரில் சீனாவில் இருந்து தைவான் பிரிந்து தனி இறையான்மை கொண்ட நாடாக உள்ளது. ஆனால் பிரிந்த நாள் முதலே தைவான் தனக்கு சொந்தமானது என சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கு மத்தியில்தான், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றிருந்தார். இதையடுத்து, சீன, அமெரிக்க நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டது. தைவானில் தொடர்ந்து போர் மேகம் சூழ்ந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்