What App Update : வாய்ஸ் நோட்டாக அனுப்பும் மெசேஜ்களை ஒருமுறை பார்க்கும் (View Once) வசதி விரையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


வாட்ஸ்-அப் செயலி:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.  அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில் தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


புதிய அப்பேட்


வாட்ஸ் அப்பில் நாம் அனைவரும் text மெசேஜ்களை அனுப்புவதை விட பெரும்பாலும் வாய்ஸ் நோட் தான் பயன்படுத்தி வருகிறோம். வாட்ஸ் நோட்டானது விரைவாகவும், தெளிவாகவும் ஒருவர்களுக்கு செய்திகளை எளிதில் கொண்டு சேர்க்கும். இதனால் வாய்ஸ் நோட்டையே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இது பற்றி புதிய அப்பேட் ஒன்றை விரைவில் மெட்டா நிறுவனம் தரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.


பொதுவாக வாட்ஸ் அப்பில் ஒருமுறை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி தற்போது புகைப்படங்கள், டெக்ஸ்ட் மெஜேச்களுக்கு மட்டுமே உள்ளது.  இந்த ஒருமுறை மட்டும் பார்க்கும் வகையில் அனுப்பப்படும செய்தியானது பலருக்கு மிகவும் பயனுள்ளதா இருந்து வருகிறது. இந்த வசதி மூலம் நாம் அனுப்பும் டெக்ஸ்ட் வடிவிலான செய்திகள் அல்லது புகைப்படங்கள் மற்றும் வீயோக்கள் ஆகியவற்றை ஒருமுறை ஓபன் செய்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவை தானாகவே மறைந்து போக்கும் வகையில் செய்து கொள்ள முடியும். 


இந்த வசதி தற்போது வாய்ஸ் நோட்டுக்கும் (voice note) விரைவில் வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வசதியாது விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சூழலில் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கிடைக்கப்பெற, விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


அண்மையில் வெளியான அப்டேட்


சமீபத்தில் வெளியான அப்டேட்டின்படி, ஒரு குழுவில் யார் சேர முடியும் என்பதை தீர்மானிக்கும் திறன் அட்மின்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் தொடர்பில் இருக்கும் ஒருவரும், நீங்களும் எந்தெந்த வாட்ஸ்அப் குரூப்களில் ஒன்றாக இருக்கிறீர்கள். அது உங்களுக்கு தெரிந்தாலும் அல்லது நினைவில் இல்லையெனினும், நீங்கள் இருவரும் இருக்கும் பொதுவான குழுக்களைப் பார்க்க விரும்பினாலும் அதை எளிதாக செய்யலாம். அதன்படி, சர்ச் பாக்ஸில் சென்று குறிப்பிட்ட காண்டாக்டின் பெயரை தேடினாலே, நீங்கள் இருவரும் இடம்பெற்றுள்ள குழுக்களின் விவரங்களை அறியலாம். இந்த சேவை சமீபத்தில் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI