இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று முதல் வரும் 4ம் தேதி வரை தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதி நோக்கி வீசக்கூடும். இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 4-ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதனால், அனல்காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்’ என எச்சரித்துள்ளது.
அனல் காற்று வீசும் வெளியே வராதீங்க என வானிலை மையம் எச்சரிக்கை
ராஜேஷ். எஸ் | 01 Apr 2021 01:48 PM (IST)
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை உயர்வால் அனல்காற்றும் வீசும் என்பதால், மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாதிரி படம்