வீர, தீர சாகசம் செய்த பெண்கள்


சுதந்திர தின விழாவின் போது சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும்,  தனிதன்மையுடன் கூடிய வீரமான, துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல்மிக்க ஒரு பெண்மணிக்கு அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைகாக "கல்பனா சாவ்லா விருது" ஆண்டுதோறும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

 

இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று மட்டும் பொன்னாடை வழங்கப்படும்.  இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.  இயற்கை சீற்றங்கள், விபத்துக்கள் தீ விபத்துகள் ஆகியவற்றில் இருந்து பாதிக்கப்பட்டு வரை மீட்டெடுத்தல்,  திருட்டு மற்றும் கொள்ளை முயற்சியை தடுத்தல் போன்ற துணிகர மற்றும் வீர, தீர சாகசம் செய்த பெண்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம். 


 

எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள், தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) இணையதள வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 08.07.2024  ஆகும். இறுதி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

கல்பனா சாவ்லா விருது


 

கல்பனா சாவ்லா விருது என்பது ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அளிக்கும் விருதுகளில் ஒன்றாகும். இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக தமிழ்நாட்டில் வீர, தீர, சாகசச் செயல் புரியும் இளம் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது