எங்களுக்கு வாரிசு உண்டு கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்ட வாரிசை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம் என்றும்,  எல்லோருக்கும் எல்லா உரிமைகளை பெற வேண்டியது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும் அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். 


விக்கிரவாண்டி அருகேயுள்ள 605 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட வீடுர் அணையானது 30 அடியை எட்டிய நிலையில் 32 அடி எட்டியவுடன் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்பட உள்ளதால் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் ஆட்சியர் மோகன் வீடுர் அணைக்கு நீர் வரத்து பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர். வீடுர் அனை திறக்கப்பட்டால் தமிழக பகுதிகளான சிறுவை, பொம்பூர், வீடுர், நெமிலி, தொள்ளமூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளான உசுட்டேரி, பத்துக்கண்ணு, பிள்ளையார்குப்பம் ஆகிய பகுதி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கிராம மக்கள்  பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.


அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அமைத்த முதலமைச்சர் ஸ்டாலின் வீடுர் அனையை தூர் வாருவதற்கு 40 கோடி ஒதுக்கப்பட்டதால் தனது முழு கொள்ளவான 605 மில்லியன் கன அடி நீர் நிரம்பும் வகையில் அணை உள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், விவசாய நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாகவும் பல்வேறு துறைகள் சார்ந்து விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார்.


மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு வாரிசு அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழிசை செளந்தர்ராஜன் குற்றச்சாட்டு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மஸ்தான், வாரிசு இல்லாதவர்கள் வருத்தப்படுவதாக யாரு இருக்கா கிராமத்தில் பழமொழி ஒன்று கூறுவார்கள் எதிர்த்த வீட்டில் ஆண் பிள்ளை பிறந்தால் உலைக்கு எடுத்து இடி இடினு இடித்து கொண்டாளாம் என்பதை போல உள்ளதாக மேற்கோள் காட்டி கூறிய அவர், எங்களுக்கு வாரிசு உண்டு கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொண்ட வாரிசை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்  எல்லோருக்கும்  எல்லா உரிமைகளை பெற வேண்டியது தான் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறினார்.