Continues below advertisement


விழுப்புரம்: விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் இன்று 02.09.2025 செவ்வாய்க்கிழமை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில்


இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்., செப்டம்பர்  2, 3, 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து காலை 5.40 மணிக்கு திருப்பதி செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமார்கத்தில் இந்த ரயில் (எண்: 16853) திருப்பதிக்கு பதிலாக மாலை 4.40 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்படும்.


இதேபோல், செப்டம்பர் 2, 6, 9, 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமு ரயில் முண்டியப்பாக்கத்துடன் நிறுத்தப்படும். அதே நாள்களில் விழுப்புரத்திலிருந்து நண்பகல் 1.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மெமு ரயில் விழுப்புரத்துக்குப் பதிலாக முண்டியப்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு ஏற்றவாறு பயண திட்டத்தை முறையாக பயன்படுத்திகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து பிகார் மாநிலம் பரோனிக்கும், திருநெல்வேயிலிருந்து கா்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.


இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


மதுரையிலிருந்து செப்.10 முதல் நவ.26-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரவு 8.40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06059) 4-ஆவது நாள் (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு பரவுனி சென்றடையும்.


மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்: 06060) செப்டம்பர் 13 முதல் நவ.29-ஆம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 11மணிக்கு புறப்பட்டு 4-ஆவது நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு மதுரை சென்றடையும்.


இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், நாயுடுபேட்டை, கூடூா், நெல்லூா்,விஜயவாடா, புவணேசுவா், சித்தரஞ்சன் வழியாக பரோனி சென்றடையும்.


அதேபோல், திருநெல்வேலியிலிருந்து செப்.7 முதல் அக்.26-ஆம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06103) மறுநாள் நன்பகல் 1 மணிக்கு கா்நாடக மாநிலம் ஷிவமொக்க டவுன் சென்றடையும்.


மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்: 06104) ஷிவமொக்கா டவுனிலிருந்து செப்.8 முதல் அக்.27 வரை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நன்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.


இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, திருத்தணி, விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, வழியாக ஷிவமொக்கா சென்றடையும்.


சென்னை சென்ட்ரலிலிருந்து செப்டம்பர் 14 முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06039) மூன்றாம் நாள் இரவு 8 மணிக்கு பீகார்  மாநிலம் பரவுனி சென்றடையும்.


மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்: 06040) பரவுனியிலிருந்து செப்டம்பர் 17 முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு முன்றாம் நாள் மாலை 6 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில், சென்ட்ரலிலிருந்து சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், விஜயவாடா, புவணேசுவா், சித்தரஞ்சன் வழியாக பரவுனி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை செப்டம்பர் காலை 8 முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது