விழுப்புரம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு பஞ்சப்படி வழங்ககோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது, போலீசாருக்கும்,  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஆனது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து 86 ஆயிரம் பணியாளர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இந்த பணியாளர்களுக்கு கடந்த 7 வருடங்களாக பஞ்சப்படி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பஞ்சப்படி வழங்க கோரி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு நீதிமன்றமும் பஞ்சப்படி வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் அரசு பஞ்சப்படி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சார்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் 100 நாட்களில் பஞ்சப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்திருந்த நிலையில் ஏன் வழங்கவில்லை என கூறி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போலீசார் ஓய்வு பெற்ற பணியாளர்களை கைது செய்ய முயன்ற போது போலீசாருக்கும் ஓய்வு பெற்ற பணியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.