லாரி மீது வேன் மோதி விபத்து... இறுதி சடங்கிற்கு சென்ற போது நேர்ந்த சோகம்
விக்கிரவாண்டி அருகே நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் வேன் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம்.

விழுப்புரம்: இறுதி சடங்கு நிகழ்விற்கு சென்றபோது விக்கிரவாண்டி அருகே நின்றுக்கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் வேன் மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். 5 பேருக்கு கைகளில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறுதி சடங்கிற்க்கு சென்ற போது விபத்து
கடலூர் மாவட்ட புருஷானூர் கிராமத்தை சார்ந்த வீரப்பன் என்பவரின் உறவினர் சென்னையில் உயிரிழந்துவிட்டதால், அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக வீரப்பனின் உறவினர்கள் இருபது நபர்களை வேனில் அழைத்து கொண்டு சென்றுள்ளார்.
Just In




லாரி மீது வேன் மோதி விபத்து
அப்போது விக்கிரவாண்டி அழுக்கு பாலம் பகுதி அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது பாலம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த நபர்கள் லேசான காயங்கள் மற்றும் 5 பேருக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை
இதனையடுத்து விபத்து குறித்து தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் வேனில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவே உடனடியாக விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறுதி சடங்கிற்கு சென்றபோது லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.