மேலும் அறிய
நண்பர்களுடன் சென்ற பள்ளிச் சிறுவன்... கிணற்றில் இருந்த எமன்... சோகத்தில் மூழ்கிய கிராமம்
பாலாஜி சக நண்பர்களுடன் வடகுச்சிபாளையம் பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது கிணற்று நீரில் குதித்த பாலாஜி வெளியே வராமல் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

கிணற்றில் முழ்கி சிறுவன் உயிரிழப்பு
Source : ABP NADU
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பள்ளிச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபுவின் மகன் தம்பதியினரின் மகன் பாலாஜி. இவர் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் விடுமுறையில் இருந்த பாலாஜி சக நண்பர்களுடன் வடகுச்சிபாளையம் பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது கிணற்று நீரில் குதித்த பாலாஜி வெளியே வராமல் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து உடன் குளித்த நண்பர்கள் கூச்சலிடவே அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து தேடியுள்ளனர். அப்போதும் பள்ளி சிறுவனை மீட்க முடியாததால் விக்கிரவாண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கிய பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தேர்வு நடைபெறும் நேரத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீச்சல் தெரியாமல் இருக்க பல ஆபத்துக்கள் உள்ளன. குறிப்பாக நீச்சல் குளங்கள், ஏரி, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் நீச்சல் தெரியாமல் போனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். நீச்சல் தெரியாதவர்கள் நீச்சல் குளங்களில் குதித்தால் மூழ்கி உயிரிழக்கலாம். எனவே, நீச்சல் தெரியாதவர்கள் நீச்சல் குளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















