விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் வேலை செய்து வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் எப்படி இறந்தார் என நீதி கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜ்குமார் மனைவி ரஞ்சிதா புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகவிர்க்கு உட்பட்ட கேத்து ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஜே சி பி ஓட்டுநர் ராஜ்குமார் காண்ட்ராக்டர் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரனிடம் வேலை செய்து வருகிறார். காண்ட்ராக்டர் பிரபாகரன் ஜேசிபி டிரைவரான ராஜ்குமாரை விழுப்புரம் ரயில்வே கான்ட்ராக்டர் பணிக்காக அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் 18ம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ்குமாரின் மனைவி ரஞ்சிதா விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா உட்பட்ட கேத்து ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்து பிரபாகரன் என்பவரிடம் ஜேசிபி ஓட்டுனராக எனது கணவர் ராஜ்குமார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமாரை ரயில்வே காண்ட்ராக்ட் வேலைக்காக பிரபாகரன் விழுப்புரத்திற்கு அனுப்பி வைத்தார். ராஜ்குமார் விழுப்புரத்தில் வேலை செய்து வந்த நிலையில் 17ஆம் தேதி இரவு 7 மணி அளவில் ராஜ்குமாரை அவரது மனைவி ரஞ்சிதா தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அவருடன் பணிபுரியும் ஆபரேட்டர் மோகன் தொடர்பு கொண்டு ராஜ்குமாருக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அவரை மருத்துவமனையில் அனுமதி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் ரஞ்சிதாவிடம் 'நீ மட்டும் தனியா வா' என்றும் ஓனர் பிரபாகரன் காரில் அழைத்து வருவார் என தெரிவித்துள்ளார். மேலும் இதனை மாமனார் மாமியார் அவர்களுக்கு தெரிவிக்காமல் நீ மட்டும் வா எனக் கூறியுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அழைத்துச் செல்ல வேண்டும் என பதறி கொண்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தார்.
மேலும் ராஜ்குமார், முகம், தலை, கை கால் உடல் பகுதி முழுவதும் காயம் இருந்தன. இது குறித்து கேட்டதற்கு யாரும் பதில் சொல்லாமல் அவசரகதியில் உடற்கூறு ஆய்வு செய்யாமல் அமரர் ஊர்தி மூலம் அனுப்பி வைத்து விட்டதாகவும். இந்த நிலையில் ராஜ்குமார் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றவுடன் உறவினர்கள் ஏன் உடற்கூறு ஆய்வு செய்யாமல் எடுத்து வந்தீர்கள் என்று கேட்டதற்கு பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ராஜ்குமாரின் மனைவி ரஞ்சிதாவிற்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கணவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கு நீதி வேண்டும் எனவும் மறு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.